May 12, 2026
தண்டோரா குழு
சோனி இந்தியா நிறுவனம் பிராவியா 3II மாடலை அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோர் இல்லங்களில் பொழுதுபோக்கின் அனுபவத்தை மேலும் உச்சமாக்குகிறது.
சோனியின் பிரீமியம் ரக தொலைக்காட்சிகளில் இடம்பெறும் மேம்பட்ட எக்ஸ்ஆர் பிராசஸர் -ன் ஆற்றலை இந்தியாவில் உள்ள அதிகப்படியான இல்லங்களுக்குக் கொண்டு வரும் வகையில், இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் intelligent picture processing அம்சத்தை மையமாகக் கொண்டுள்ளது.
பிராவியாவின் AI எக்ஸ்ஆர் பிராசஸர் ஆனது, மனிதர்கள் எவ்விதம் பார்க்கிறார்களோ மற்றும் கேட்கிறார்களோ அதே முறையில் உள்ளடக்கங்களைப் பகுப்பாய்வு செய்து, மிகச்சிறந்த டெப்த், கான்ட்ராஸ்ட், கலர் மற்றும் தெளிவுடன் கூடிய வியக்கத்தக்க தத்ரூபமான காட்சிகளை வழங்குகிறது. XR Triluminos Pro™, Dolby Vision®, Dolby Atmos®, DTS:X® மற்றும் 4K 120Hz செயல்திறன் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, இந்த BRAVIA 3II மாடலானது சினிமா போன்ற திரை, மூழ்கடிக்கும் ஒலி மற்றும் தடையற்ற கேமிங் அனுபவம் ஆகியவற்றை ஒரு சேர வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இல்லத்தரசி பொழுதுபோக்கு அனுபவத்தை ஒரு புதிய உயரத்திற்கு இது எடுத்துச் செல்கிறது.BRAVIA 3II: க்ளியர் சவுண்ட் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய பிரகாசமான, துல்லியமான மற்றும் தத்ரூபமான கலர்ஸ் சோனி இந்தியா நிறுவனம் பல்வேறு ஸ்க்ரீன் சைஸ்-களில் புதிய BRAVIA 3II ஆனது வீட்டுப் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சீரிஸாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முதற்கட்டமாக 55-இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்களில் தொடங்கி, அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான மாடல்கள் அறிமுகமாகும். இந்த வரிசையின் உச்சகட்டமாக, பிரம்மாண்டமான 100-இன்ச் மாடல் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எதிர்பார்க்கப்படுகிறது.பரந்த மற்றும் ஆழ்ந்த காட்சி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 100-இன்ச் BRAVIA 3II, “வீட்டிற்கே வரும் சினிமா” எனும் அனுபவத்தை, முன்னெப்போதும் இல்லாத வகையில் திரையரங்கின் பிரம்மாண்டத்தை உங்கள் வரவேற்பறைக்கே கொண்டு வரும்.
மேம்பட்ட AI XR Processor™ தொழில்நுட்பத்துடன் கூடிய BRAVIA 3II, மேம்படுத்தப்பட்ட காட்சித் தரத்தை வழங்குகிறது. சோனியின் மேம்பட்ட XR Processor™ மூலம் இயங்கும் BRAVIA 3II, செயற்கை நுண்ணறிவை அறிவாற்றல் நுண்ணறிவுடன் இணைத்து, மனிதர்கள் இயற்கையாகவே பார்வை மற்றும் ஒலியை உணரும் விதத்தில் உள்ளடக்கங்களை பகுப்பாய்வு செய்கிறது. இது ஆழம், வண்ணம் மற்றும் தெளிவை நிகழ்நேரத்தில் மேம்படுத்தி, இயல்பான மற்றும் தத்ரூபமான காட்சிகளை வழங்க தொலைக்காட்சிக்கு உதவுகிறது. XR Triluminos Pro™ வசதியுடன், BRAVIA 3II பல பில்லியன் வண்ணச் சாயல்கள், ஆழ்ந்த கறுப்பு நிறங்கள் மற்றும் பிரகாசமான ஹைலைட்ஸ் ஆகியவற்றுடன் காட்சிகளை மிகத் துல்லியமாக மறுஉருவாக்கம் செய்து உயிர் கொடுக்கிறது. XR Clear Image தொழில்நுட்பமானது தேவையற்ற இரைச்சல் மற்றும் மங்கலான தன்மையைக் குறைப்பதன் மூலம் தெளிவை மேலும் மேம்படுத்துகிறது.
இதன் மூலம் மிக வேகமாக நகரும் காட்சிகளிலும் ஒவ்வொரு ஃபிரேமும் கூர்மையாகவும் விவரமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. Motionflow XR தொழில்நுட்பம் இயக்கங்களை மென்மையாகவும் சீராகவும் வைத்திருக்கிறது,இதனால் திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் கேமிங் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச் சிறந்த அனுபவத்தைத் தருகின்றன.