• Download mobile app
13 Nov 2026, FridayEdition - 3929
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் 16-வது அறிவியல், தொழில்நுட்பத் திறன் கண்காட்சி மாணவர்களின் படைப்புகளுக்கு பாராட்டு

November 12, 2026 தண்டோரா குழு

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றல், அறிவியல் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தும் 16வது ”STEAM X -2026′ கண்காட்சி தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.

இதனை ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் தொடங்கி வைத்து பேசுகையில்,மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்கள் அறிவை வெளிப்படுத்தி, சிக்கல்களைத் தீர்க்கும் திறனை வளர்த்துக்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆராயவும் இத்தகைய கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளியின் தாளாளர் மெர்சி உம்மன், கௌரவப் பொருளாளர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டு,மாணவர்களின் படைப்புத்திறனைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.முன்னதாக பள்ளி முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவரும் தலைமை ஆசிரியர் மற்றும் துணை முதல்வர் டாக்டர் வி.திவாகரன், ஜூனியர் பள்ளி துணை முதல்வர் பிரியா ஷீன், உதவித் தலைமை ஆசிரியர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரும் இணைந்து, சிறப்பு விருந்தினரையும் நடுவர்களையும் கௌரவித்தனர்.

மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், கணினி அறிவியல், கணிதம், வணிகவியல் மற்றும் கலை-கைவினைப் பொருட்கள் சார்ந்த பல்வேறு படைப்புகளைக் காட்சிப்படுத்தி இருந்தனர். கண்காட்சியை பார்வையிட்ட பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு அவற்றின் செயல்பாட்டினை கேட்டறிந்து வெகுவாகப் பாராட்டினர்.

கணிதப் படைப்புகளை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் எம்.விவேக் பிரபு மதிப்பீடு செய்தார். ஜூனியர் பிரிவில் உள்ள படைப்புகளை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ- &இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் பி.டி. (B.T.) உதவியாளர்கள் மோனிகா, வி.சாரம்மா ஆகியோர் நடுவர்களாக இருந்து மதிப்பீடு செய்தனர்.

கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் படைப்புகளை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர் இ.கே.கிரிசன், கேரளத்தில் உள்ள ‘இன்கர் ரோபோட்டிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Inker Robotic Solutions Pvt. Ltd.) நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ஆலன் சுனில் மேத்யூ ஆகியோர் மதிப்பீடு செய்தனர்.

அறிவியல் கண்காட்சிப் படைப்புகளை, ஆர்.கே.ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியின் இயற்பியல் முதுகலை உதவியாளர் ஸ்ரீஜா, வேதியியல் முதுகலை உதவியாளர் எஸ்.நிர்மலா, ஸ்டேன்ஸ் பள்ளி (CISCE) உயிரியல் முதுகலை உதவியாளர் பிரேமா நாயகம் ஆகியோர் நடுவர்களாக இருந்து மதிப்பீடு செய்தனர். இளையோர் அறிவியல் பிரிவுகளுக்கான படைப்புகளை, ஸ்டேன்ஸ் ஏஐஎச்எஸ்எஸ் (Stanes AIHSS) பள்ளி பி.டி. (B.T.) உதவியாளர் ஜே.சுகந்தி, முதுகலை உதவியாளர் டபிள்யூ.சுகன்யா ஆகியோர் மதிப்பீடு செய்தனர்.

வணிகவியல் திட்டப்பணிகளை, ‘குன்னத் பேப்பர்ஸ்’ (Kunnath Papers) நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரரும், ஆராய்ச்சியாளருமான அந்தோணி பால் குன்னத் மதிப்பீடு செய்தார். கலை மற்றும் கைவினைப் படைப்புகளை, மாநில விருது பெற்ற கலைஞரும், ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியருமான ஜீவன் வி.சக்திவேல் மதிப்பீடு செய்தார்.

மேலும் படிக்க