• Download mobile app
13 Nov 2026, FridayEdition - 3929
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ அழகு நிலையம் – சாய்பாபா காலனியில் விரைவில் தொடக்கம்!

November 12, 2026 தண்டோரா குழு

Lபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற அழகு நிலைய நிறுவனமான ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ (Jean Louis David) தனது புதிய கிளையை கோவை சாய்பாபா காலனி பகுதியில் தொடங்க உள்ளது.

கடந்த 1961-ம் ஆண்டு பாரிஸ் நகரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது உலகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான அழகு நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது.
65 ஆண்டுகால பிரெஞ்சு அழகுக்கலை பாரம்பரியத்தைக் கொண்ட இந்நிறுவனம், இந்தியாவில் தனது அடுத்தகட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவையில் புதிய கிளையை துவங்கி உள்ளது.

தமிழகத்தில் இதுவே முதல் கிளையாகவும், இந்தியாவில் இரண்டாவது கிளையாகவும் அமைந்துள்ள இது தொடர்பான,. செய்தியாளர்கள் சந்திப்பில் கிளையின் உரிமையாளர் சூர்யபிரகாஷ் பேசினார்..
“அழகுக்கலைத் துறையில் உலக அளவில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ள ஜீன் லூயிஸ் டேவிட் நிறுவனத்தை கோவைக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 65 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய அழகுக்கலை நுட்பங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களின் முக அமைப்பு, தனித்துவம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் சிகை அலங்காரங்களை உருவாக்குவது இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.ஒரே மாதிரியான பயிற்சி முறையில் உருவாக்கப்பட்ட கலைஞர்கள் மூலம் சர்வதேச தரத்திலான சேவையை வழங்குவது இதன் தனிச்சிறப்பு.

கோவையில் தொடங்க உள்ள இந்த மையத்தில் உலகத்தரம் வாய்ந்த அழகு மற்றும் சிகை அலங்காரச் சேவைகளை உள்ளூர் மக்களும் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடம்பரமான அழகு நிலைய அனுபவம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி, தரமான அழகு சேவைகளை அனைவரும் பெறும் வகையில் செயல்படுவதே எங்களது நோக்கம்.

தொழில்முனைவுத் துறையில் எனது அனுபவத்துடன், சர்வதேச நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் இணைத்து கோவையில் புதிய முயற்சியைத் தொடங்குகிறோம். எதிர்காலத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் இந்நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்துவதே எங்களது இலக்கு” என்றார்.

இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க