• Download mobile app
13 Nov 2026, FridayEdition - 3929
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் சீரற்ற இருதயத் துடிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்!

November 12, 2026 தண்டோரா குழு

இருதயத்தின் துடிப்பு இயல்பை விட மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ அல்லது சீரற்ற முறையிலோ இருப்பது இருதயத் துடிப்பு கோளாறு (Arrhythmia) எனப்படும். இத்தகைய பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் சீரற்ற இருதயத் துடிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நவம்பர் 12 முதல் நவம்பர் 26, 2026 வரை நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.தொடர்ச்சியான களைப்பு, தலைசுற்றல், விரைவான இருதயத் துடிப்பு, இருதயத் துடிப்பு தவறுதல், மூச்சுத் திணறல், படபடப்பு, மார்பு வலி அல்லது மார்பில் அழுத்தம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் இருதயத் துடிப்பு பாதிப்புகளைக் கண்டறிவதற்கான சிறப்புப் பரிசோதனைகளுடன், தைராய்டு பரிசோதனை (TSH), ஹீமோகுளோபின் அளவு (Hb), பொட்டாசியம் அளவு, கிரியேட்டினின் அளவு, எக்கோ (ECHO), இ.சி.ஜி (ECG) உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இருதயத் துடிப்பு சிறப்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனையும் வழங்கப்படும்.

இருதய துடிப்பு நோய்கள் தொடர்பான பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதற்கு இந்த முகாம் பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

மேலும்.விவரங்களுக்கு: 74188 87411 கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை, கோயம்புத்தூர்.

மேலும் படிக்க