• Download mobile app
12 Nov 2026, ThursdayEdition - 3928
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யூனியன் வங்கியின் 108-வது நிறுவன தின விழா – 5 புதிய கிளைகள், 3 யுவா லவுஞ்ச் மையங்கள் தொடக்கம்!

November 12, 2026 தண்டோரா குழு

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 108-வது நிறுவன தின விழா கோவையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மண்டலத்தில் 5 புதிய வங்கிக் கிளைகள் மற்றும் 3 யுவா லவுஞ்ச் மையங்கள் தொடங்கப்பட்டன.

கடந்த 1919-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தனது 108-வது நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் நிறுவன தின விழா நடைபெற்றது.

விழாவில் வங்கியின் பொது மேலாளரும், கோவை மண்டலத் தலைவருமான எஸ்.ஏ. ராஜ்குமார், கோவை மண்டல உறுதிப்பாட்டுப் பிரிவுத் தலைவர் சி. பிரபு, துணை பொது மேலாளரும் கோவை பிராந்தியத் தலைவர் எஸ்.எஸ். லாவண்யா ஆகியோர் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 108 புதிய வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக கோவை மண்டலத்தில் கோவைப்புதூர், கோத்தகிரி, வள்ளியூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி வளாக யுவா கிளை ஆகிய 5 புதிய வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும்,இளைஞர்களின் வங்கிச் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 3 புதிய யுவா லவுஞ்ச் மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் நவீன வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் டிஜிட்டல் கார்ப்பரேட் சம்பளக் கணக்குகள், யூனியன் வேகிள் பிளஸ் (union vehicle plus), வருங்கால வைப்பு நிதிக்கான டிஜிட்டல் கடன், உலகளாவிய ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய சேவைகளையும் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் வங்கி ஊழியர்கள் சார்பில் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ரூ.11.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் கீழ் சமூக மேம்பாடு, வாழ்வாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.13.72 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள காது கேளாதோருக்கான இன்பன்ட் ஜீசஸ் பள்ளியைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பங்கேற்கும் குழந்தைகள் தின விழாவை நடத்துவதற்குத் தென்னிந்திய நல அறக்கட்டளைக்கு வங்கியின் கோவை மண்டலம் நிதியுதவி வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர் நலன், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய வங்கிச் சேவைகள் மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தனது எதிர்கால வளர்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தி வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க