August 12, 2026
தண்டோரா குழு
ஹெச்பி இந்தியா நிறுவனம் மக்கள் கற்கும், பணிபுரியும் மற்றும் புதியவற்றை உருவாக்கும் விதத்திற்கு ஏற்ப இந்தியாவில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்ட ஹெச்பி ஆம்னிபேட்12 சாதனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
லேப்டாப்பின் உற்பத்தித்திறனையும் டேப்லெட்டின் போர்ட்டபிலிட்டியையும் ஒன்றாக இணைத்து, பயனர்கள் வேலைக்கும் பொழுதுபோக்கிற்கும் இடையே சுலபமாக மாறக்கூடிய பிளெக்சிபிலிட்டியை இந்த ஹெச்பி ஆம்னிபேட் 12 வழங்குகிறது. மாணவர்கள்,முதன்முறை பயன்பாட்டாளர்கள்,குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் இளம் தொழில்முறை வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஹெச்பி ஆம்னிபேட்12, நவீன கற்றல்,ஒத்துழைப்பு மற்றும் அன்றாட உற்பத்தித்திறனுக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வெர்ச்சுவல் வகுப்புகளில் பங்கேற்பது, வணிகப் பணிகளை நிர்வகிப்பது அல்லது பயணத்தின் போது கன்டென்ட் உருவாக்குவது எதுவாக இருந்தாலும், இன்றைய பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறும் வகையில் ஒரு பன்முகத்தன்மை கொண்ட 2-in-1 அனுபவத்தை இந்த சாதனம் வழங்குகிறது. பன்முகத்தன்மையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஹெச்பி ஆம்னிபேட் 12, டிடாச்சபிள் கீபோர்டு வசதியைக் கொண்டுள்ளது.
இது பயனர்கள் டச்-ஃபர்ஸ்ட் டேப்லெட் அனுபவத்திலிருந்து லேப்டாப் ஸ்டைல் உற்பத்தித்திறனுக்கு மிக எளிதாக மாற உதவுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்கள் மூலம் இயங்கும்,இந்த சாதனம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்பட்டு அன்றாட கம்ப்யூட்டிங்கிற்கு மிகவும் எளிமையான மற்றும் வேகமான அனுபவத்தை வழங்குகிறது.”ஹெச்பி நிறுவனத்தில், தொழில்நுட்பம் என்பது மக்கள் அதை பயன்படுத்தும் விதத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஹெச்பி ஆம்னிபேட்12 சாதனம் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் வளர்ந்து வரும் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது – புதிய திறன்களை வளர்க்கும் மாணவர்கள் முதல் தங்கள் தொழிலை நடத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளும் முதன்முறை பயன்பாட்டாளர்கள் வரை அனைவருக்குமானது.
லேப்டாப்பின் உற்பத்தித்திறனை டேப்லெட்டின் பிளெக்சிபிலிட்டுடன் இணைப்பதன் மூலம், இந்தியா கற்கும், பணிபுரியும் மற்றும் உருவாக்கும் விதத்திற்கு ஏற்ப எளிமையான, வேகமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சாதனத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,” என்று ஹெச்பி இந்தியா நிறுவனத்தின் பர்சனல் சிஸ்டங்கள் பிரிவின் மூத்த இயக்குநர் வினீத் கெஹானி கூறினார்.
12 -அங்குல 2 கே மல்டி-டச் திரையானது, 16:10 விகிதம், 400 நிட்ஸ் வரையிலான பிரகாசம் மற்றும் 90 ஹெச்இசட் வரையிலான புதுப்பிப்பு விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இது வாசித்தல், குறிப்பெடுத்தல், விளக்கக்காட்சிகள், பொழுதுபோக்கு மற்றும் வீடியோ அழைப்புகள் போன்றவற்றுக்கு ஒரு ஆழ்ந்த அனுபவத்தை வழங்குகிறது.18 மணி நேரம் வரையிலான பேட்டரி ஆயுள் பயனர்கள் நாள் முழுவதும் கற்றல், வேலை மற்றும் கூட்டுப்பணிகளில் திறம்படச் செயல்பட உதவுகிறது.
ஹெச்பி ஆம்னிபேட்12, டெனிம் ப்ளூ மற்றும் மீடியோர் சில்வர் ஆகிய வண்ணங்களில், ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர், அமேசான், ரிலையன்ஸ், ஃபிளிப்கார்ட், குரோமா,விஜய் சேல்ஸ் மற்றும் ஹெச்பி வேர்ல்ட் ஸ்டோர்களில் ரூ.48,999 என்ற ஆரம்ப விலையில் இப்போது கிடைக்கிறது.இது பாகங்கள் மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகள் உட்பட, ஓராண்டு வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்துடன் வருகிறது.