• Download mobile app
17 May 2026, SundayEdition - 3749
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெம் மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

November 14, 2019

கோவை ஜெம் மருத்துவமனையில் சர்க்கரை நோயை வெல்லலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை மருத்துவமனை அரங்கத்தில் நடந்தது.

இதில் மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பிரவீன் ராஜ் பேசுகையில், முதன் முறையாக இயற்கை மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவம் இணைந்து சர்க்கரை நோயை கையாள உள்ளோம். ஜெம் மருத்துவமனை, அவிநாசி பல்கலைக்கழகம் மற்றும் யங் இந்தியா உடன் இணைந்து உடல் பருமன் குறித்து குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவையில் உள்ள பள்ளிகளில் நடத்தி வருகிறோம். இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் அதிக உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 சதவீதம் அதிக உடல் எடையுடனும், 12.2 சதவீதம் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்று உடல் பருமனாக உள்ள சிறுவர்கள் நாளை உடல் பருமன் நோயாளிகளாக மாறுவதற்கான அபாயம் உள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்களைச் சரிசெய்ய மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையின் கூடிய முழுமையான அணுகுமுறை உதவுகிறது என்றார்.

மேலும் படிக்க