• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை – தமிழிசை சவுந்தரராஜன்

November 28, 2018 தண்டோரா குழு

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை.வேண்டுமென்றால் டெல்லியில் புகார் சொல்லலாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் நடன இயக்குனராகவும் விளங்குபவர் காயத்திரி ரகுராம்.பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.இவர்,கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவு குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் அபராதம் செலுத்தியதாக செய்தி வெளியானது.இதற்கு மறுப்பு தெரிவித்த காயத்திரி ரகுராம் தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பாரதிய ஜனதாவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று குற்றம் சாட்டினார்.இதனால் பாஜாக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து,பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இந்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.இதற்கு தமிழிசை காயத்திரி ரகுராம் பாரதிய ஜனதாவிலேயே இல்லை என்று பதிலளித்தார்.

இதனால் கோபமடைந்த காயத்திரி ரகுராம் இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.அதில்,‘அன்புள்ள தமிழிசை மேடம்,நான் பாரதிய ஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக,நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது.இது ஒரு தேசியக் கட்சி.இரண்டாவதாக தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள்.அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர்.

அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா என்ன? நான் பாரதிய ஜனதாவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல.உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள்.உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை.

நீங்கள் தமிழக பாஜனதாவின் தலைவர் மட்டும் தான்.நீங்களே எல்லோரின் எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது.தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சனைகளை சந்திப்பதை விட அதில் இருந்து நான் விலகியே இருக்கிறேன்.அன்று காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சையில் நான் உண்மையை விளக்கத் தயாராக இருக்கிறேன்.

ஆனால்,யாரும் கேட்கத் தயாராக இல்லை.அன்று நான் தான் காரை ஓட்டிச் சென்றேன்.காவலர் ஒருவர் என்னை இறக்கிவிட்டார் என்று சொல்வது பொய்.நான் தேவைப்பட்டால் ரத்த பரிசோதனைக்குக்கூட தயார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,

“நடிகை காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதாவில் கிடையாது.வேண்டுமென்றால் டெல்லியில் புகார் சொல்லலாம்.பிக்பாஸில் பங்கேற்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.அன்றே விலகிவிட்டார்”.என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க