August 5, 2026
தண்டோரா குழு
சோனி இந்தியா நிறுவனம், இதுவரை தயாரித்த தொலைக்காட்சிகளிலேயே மிகப்பரிய அளவிலான 115 அங்குல (292 செ.மீ) புதிய தொலைக்காட்சியுடன் தனது முதன்மை மாடலான பிராவியா 9II வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முதன்மை மாடல், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய திரையின் பிரம்மாண்டத்தையும், சோனியின் மேம்படுத்தப்பட்ட ட்ரூ ஆர்ஜிபி தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து, நிகரற்ற சினிமா அனுபவத்தை வழங்குகிறது. சோனியின் ட்ரூ ஆர்ஜிபி பிராவியா தயாரிப்பு வரிசை தற்போது 55 அங்குலம் (140 செ.மீ) முதல் 115 அங்குலம் (292 செ.மீ) வரை விரிவடைந்துள்ளது.இது பிரீமியம் திரை அளவுகள் முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்குத் திரைப்படத்தின் உண்மையான காட்சித் தரத்தை வழங்குகிறது.
சோனி இந்தியாவின் மேலாண் இயக்குநர் சுனில் நய்யார் கூறுகையில்,
“ஒவ்வொரு வீட்டிற்கும் சினிமாவின் மாயாஜாலத்தைக் கொண்டு சேர்ப்பதே சோனியின் என்றும் மாறாத நோக்கமாகும்.55 அங்குலம் (140 செ.மீ) முதல் 115 அங்குலம் (292 செ.மீ) வரையிலான முழுமையான ட்ரூ ஆர்ஜிபி வரிசையின் மூலம், ஒவ்வொரு திரை அளவிலும் உண்மையான சினிமா அனுபவங்களை வழங்கி, பிரீமியம் பெரிய திரை பொழுதுபோக்கில் புதிய மைல்கற்களை அமைப்பதோடு, பிரீமியம் வீட்டு பொழுதுபோக்கை சோனி தொடர்ந்து மறுவரையறை செய்கிறது.
“சோனி கார்ப்பரேஷனின் வீட்டு உபயோக தயாரிப்பின் வணிகப் பிரிவின் உலகளாவிய தலைவர் நெஸு டைசுகே கூறுகையில்,
“படைப்பாளரின் எண்ணத்தை அப்படியே பார்வையாளர்களுக்கு வழங்கி, தயாரிப்பாளரின் அசல் பார்வைக்கு மிக நெருக்கமாக அவர்களைக் கொண்டு சேர்க்கும் அனுபவத்தை அளிப்பதில்தான் பிரீமியம் தொலைக்காட்சியின் எதிர்காலம் உள்ளது என்று சோனியில் நாங்கள் நம்புகிறோம். இந்த 115 அங்குலம் (292 செ.மீ) தொலைக்காட்சியின் அறிமுகத்தின் மூலம், முன்னெப்போதும் இல்லாத வகையில் வீட்டிலேயே ஒரு புதிய சினிமா போன்ற அனுபவத்தைக் கொண்டு வந்து வீட்டுப் பொழுதுபோக்கின் எல்லைகளை விரிவுபடுத்துகிறோம். எங்களின் புதுமையான ட்ரூ ஆர்ஜிபி தொழில்நுட்பம் மற்றும் பிராவியா எக்ஸ்ஆர் பிராஸஸர் மூலம் இயங்கும் இது, துல்லியமான வண்ணங்கள், அசரவைக்கும் கான்ட்ராஸ்ட் மற்றும் சிறந்த யதார்த்தமான காட்சிகளை வழங்கி, படைப்பாளிகள் உருவாக்கிய அதே அனுபவத்தைப் பார்வையாளர்கள் பெற அனுமதிக்கிறது.
” சோனியின் பிரத்யேக ஆர்ஜிபி பேக்லைட் மாஸ்டர் டிரைவ் புரோ மூலம் இயங்கும் பிராவியா ஆர்ஜிபி தொலைக்காட்சிகள், ஆர்ஜிபி எல்.இ.டி விளக்குகளைத் தனித்தனியாகக் கட்டுப்படுத்தி, சோனி ஹோம் டிவி வரலாற்றிலேயே மிகப்பரந்த வண்ண வீச்சை வழங்குகின்றன. இது பரந்த அளவிலான வண்ணங்கள், சிறந்த கான்ட்ராஸ்ட், இயற்கையான ஆழம் மற்றும் சீரான வண்ண மாற்றங்களை சாத்தியமாக்குகிறது. எக்ஸ்-வைட் ஆங்கிள் புரோ தொழில்நுட்பம், எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவான, துல்லியமான வண்ணங்களையும் சீரான காட்சித் தரத்தையும் உறுதி செய்கிறது.