• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சாரநாதப் பெருமாள் திருக்கோவில்

September 1, 2018 findmytemple.com

சுவாமி : அருள்மிகு சாரநாதப் பெருமாள்.

அம்பாள் : அருள்மிகு சாரநாயகி.

மூர்த்தி : சாரநாதர்.

தீர்த்தம் : சாரபுஷ்கரணி.

தலவிருட்சம் : செண்பகம்.

தலச்சிறப்பு :

108 திவ்ய தேசங்களில் இது 15வது திவ்ய தேசமாகும். கங்கை, காவேரி இருவரில் யார் பெரியவர் என்கிற சர்ச்சை ஏற்பட்ட போது முடிவில் பிரம்மனிடம் விடைபெறச் சென்றனர். திரிவிக்கிரம அவதாரம் எடுத்த போது சத்தியலோகம் வரை நீண்ட எம்பெருமானது பாதங்களை நான் திருமஞ்சனம் செய்ய, அதுவே பெருக்கெடுத்து ஓடி கங்கை ஆகியது. எனவே நானே புனிதமானவள் என்று கங்கை கூறினார். இதனை கேட்டு வருத்தமுற்ற காவேரி சாராபுஷ்கரணியில் உள்ள அரசமரத்தடியில் திருமாலைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டார்.

மகாவிஷ்ணு தை மாசப் பூசம் நட்சத்திர தினத்தன்று குழந்தையாய் தோன்றி தவழ்ந்து வர, கோடி சூர்யபிரகாசத்தை கண்ட காவேரி, குழந்தையன்று எம்பெருமானே என்று தொழுது நின்றாள். திருமால் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவிகள் புடை சூழ சங்கு சக்கர தாரியாக காட்சியளித்தார். ”கங்கையிற் புனிதமாய் காவேரி” என அருள் புரிந்தார். இத்தலத்தில் காவிரிக்கு தனி சன்னதி உள்ளது. மார்கண்டேயர் முக்தி அடைந்த திருத்தலம் என்பர்.

வழிபட்டோர் : மார்கண்டேயர், காவேரி.

பாடியோர் : திருமங்கையாழ்வார்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

சித்திரை – ராமானுஜர் உற்சவம்,

வைகாசி – வசந்த உற்சவம்,

ஆடி – ஜேஷ்டாபிஷேகம்,

புரட்டாசி – நவராத்திரிதிருவிழா,

ஐப்பசி – மணவாள மாமுனிகள் உற்சவம் ,

கார்த்திகை – பவித்திர உற்சவம்,

மார்கழி – ராப்பத்து – பகல்பத்து உற்சவம்,

தை – தைபூசம் – தேர்த்திருவிழா.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சாரநாத பெருமாள் திருக்கோவில்,திருசேறை – அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க