• Download mobile app
15 May 2026, FridayEdition - 3747
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 18 மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

May 15, 2026 தண்டோரா குழு

நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 18 மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். புது டெல்லி வழியாக இவர்கள் இன்று (15.05.2026) இரவு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையை வந்தடைந்தனர்.

சிலம்பம் மற்றும் தடகளப் பயிற்சிகளை வழங்கி வரும் மோகன்ஸ் அகாடமி, கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வகாடமியின் மூலம் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன், இந்திய அரசு அறக்கட்டளைச் சட்டம், 1860-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். இது என்ஐடிஐ ஆயோக் மற்றும் மத்திய அரசின் ஃபிட் இந்தியா மூவ்மெண்ட் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில், அகாடமியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 25 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக,கடந்த ஜனவரி 25-ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில், 25 மாணவர்கள் கலந்து கொண்டு ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வால் வீச்சு, வேல்கம்பு வீச்சு, மான்கொம்பு மற்றும் ஸ்டிக் பைட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்தனர்.

இந்நிலையில், கடந்த மே 10-ஆம் தேதி நேபாளத்தில் நடைபெற்ற இண்டோ-நேபாள் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், மோகன்ஸ் அகாடமி சார்பில் 18 மாணவர்கள் பங்கேற்றனர்.

அண்டர்-7, அண்டர்-9, அண்டர்-11, அண்டர்-13, அண்டர்-15, அண்டர்-17, அண்டர்-19 மற்றும் சீனியர் பிரிவுகளில் நடைபெற்ற ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வால் வீச்சு, வேல்கம்பு வீச்சு, மான்கொம்பு வீச்சு மற்றும் ஸ்டிக் பைட்டிங் போட்டிகளில் கலந்து கொண்ட 18 மாணவர்களும் தங்களது வயது பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

மேலும், இந்த 18 மாணவர்களும் தாய்லாந்தில் நடைபெற உள்ள ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க