• Download mobile app
16 Aug 2026, SundayEdition - 3840
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இன் காட் வி டிரஸ்ட்” சிறப்பு இசை நிகழ்ச்சி: இறைவனுக்கு நன்றி செலுத்திய இசைக்குழு

August 16, 2026 தண்டோரா குழு

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வேற்றுமையில் ஒற்றுமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் “இன் காட் வி டிரஸ்ட்” என்ற பிரத்யேக சுதந்திர தின இசை ஆராதனை நிகழ்ச்சி கோவையில் விமரிசையாக நடைபெற்றது.

‘தி கோயம்புத்தூர் காஸ்பெல் என்செம்பிள்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது, சுதந்திர தினத்தை மையமாக வைத்து இறைநம்பிக்கையையும் நாட்டுப்பற்றையும் இணைத்து இந்தியாவில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட ஒரு தனித்துவமான இசை நிகழ்வாகும். பேராசிரியர் ஜே.எஸ். கென்னடி சீனியர் இந்நிகழ்ச்சியை வழிநடத்தி இயக்கினார்.

கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,நமது தேசத்தில் பல்வேறு கலாச்சார, மொழி வேற்றுமைகள் மற்றும் சவால்கள் இருந்தாலும், இறைவன் நாட்டைப் பாதுகாத்து வழிநடத்தி வருவதற்கு நன்றி செலுத்தும் விதமாக பல சிறப்புப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

தனிப்பாடல்கள், கூட்டுப் பாடல்கள் மற்றும் மார்ட்டின் லூதர், நடராஜ முதலியார், ரஸல் மால்டின் ஆகியோரின் புகழ்பெற்ற இசைப் படைப்புகள் மற்றும் “இன் காட் வி டிரஸ்ட் கேன்டாடா” ஆகியவை இதில் பாடப்பட்டன.
இந்நிகழ்ச்சி நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது.நமது 80-வது சுதந்திர தினத்தில், இந்த அழகிய தேசத்தையும் விடுதலையையும் நமக்குத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதே இதன் நோக்கம். பல சவால்களுக்கு மத்தியிலும் நமது தேசத்தை இறைவன் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் பாதுகாத்து வருகிறார்.

அந்த நம்பிக்கையையும் நன்றியறிதலையும் இசையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம்.
இந்நிகழ்ச்சியில் திரளான இசைப் பிரியர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சுதந்திர தின மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் படிக்க