September 28, 2026
தண்டோரா குழு
சோனி இந்தியா, தனது ஆல்ஃபாஃபுல்-ஃபிரேம் ஈ-மவுண்ட் கேமரா அமைப்பிற்காக இரண்டு புதிய ஜி மாஸ்டர் சூப்பர் டெலிபோட்டோ பிரைம் லென்ஸ்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
400 மிமீ ஃபோகல் லென்த் கொண்ட FE 400mm F4.5 GM OSS மற்றும் 600 மிமீ ஃபோகல் லென்த் கொண்ட FE 600mm F6.3 GM OSS ஆகிய இவ்விரண்டு லென்ஸ்களும், தத்தமது பிரிவுகளில் உலகின் மிகக் குறைந்த எடைகொண்ட லென்ஸ்களாகும். FE 400mm F4.5 GM OSS லென்ஸ் தோராயமாக 994 கிராமும், FE 600mm F6.3 GM OSS லென்ஸ் தோராயமாக 995 கிராமும்2 எடையும் கொண்டு, தத்தமது பிரிவுகளில் உலகின் மிகக் குறைந்த எடை கொண்ட1 வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இக்கருவிகளின் குறைந்த எடையானது, புகைப்படக் கலைஞர்கள் வெளிப்புறச் சூழல்களைச் சுற்றிப்பார்த்து, சரியான வாய்ப்புகளையும் நிகழ்வுகளையும் கண்டறிந்து படம் பிடிக்கும் வேகமான பாணிக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது. மேலும், மிகத்துல்லியமாகச் சமநிலைப்படுத்தப்பட்ட எடையமைப்பு, கையிலேயே பிடித்துப் படம் பிடிக்கும் போது சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது;
குறிப்பாக, நகரும் இலக்குகளைத் தொடர்ச்சியாக ஃபிரேமிற்குள் வைத்துப் பின்தொடர வேண்டிய சூழல்களுக்கு இது பெரிதும் உதவுகிறது. சிறகடிக்கும் பறவைகள், வனவிலங்குகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிரிவுகளில் சூப்பர்-டெலிபோட்டோ ஒளிப்பதிவின் நெகிழ்வுத்தன்மையை இந்த அம்சங்கள் மேலும் அதிகரிக்கின்றன.
சூப்பர்-டெலிபோட்டோ வரம்பில் G Master தொடரின் தனித்துவமான உயர்தர இமேஜிங் தெளிவையும் , நயமான போக்கே , விளைவையும் வழங்கும் வகையில் இந்த லென்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொலைவில் உள்ள இலக்குகளையும் நுணுக்கமான விவரங்களுடன் படம் பிடிக்கப் பயன்படுகிறது. அத்துடன், அதிவேகமான, துல்லியமான மற்றும் சத்தமில்லாத ஆட்டோஃபோகஸ் செயல்திறன், மிக வேகமாக நகரும் இலக்குகளைக்கூட விரைவாகவும் துல்லியமாகவும் படம் பிடிக்க புகைப்படக் கலைஞர்களுக்கு வழிவகுக்கிறது.
” புதிய FE 400mm F4.5 GM OSS மற்றும் FE 600mm F6.3 GM OSS லென்ஸ்கள் மூலம், நீண்ட தூர டெலிபோட்டோ வசதியை மிகக் குறைந்த எடையில் தருவதன் மூலம் நாங்கள இந்த இலக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம். 1 கிலோவிற்கும் குறைவான எடையைக் கொண்டுள்ள இந்த லென்ஸ்கள், 400mm மற்றும் 600mm ஃபோகல் லென்த்களை புகைப்படக் கலைஞர்கள் களத்தில் எளிதாகச் சுமந்து செல்லக்கூடிய, கையாளக்கூடிய மற்றும் படம் பிடிக்கக்கூடிய அளவுக்கு ஏற்றதாக மாற்றுகின்றன.
வனவிலங்கு, பறவைகள் மற்றும் விளையாட்டுப் பிரிவுகளில் படம் பிடிக்கும் புகைப்படக் கலைஞர்கள் ஒரு காட்சியை அணுகும் மற்றும் படம் பிடிக்கும் முறையில் இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். FE 400mm F4.5 GM OSS மற்றும் FE 600mm F6.3 GM OSS லென்ஸ்கள் இந்தியாவில் உள்ள அனைத்து சோனி சென்டர்கள், ஆல்ஃபா பிளாக்ஷிப் ஸ்டோர்கள், சோனி அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், முன்னணி எலக்ட்ரானிக் கடைகள் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும். FE 400mm F4.5 GM OSS மாடல் ரூபாய்.3,10,990/-விலையிலும் , FE 600mm F6.3 GM OSS மாடல் ரூபாய். 4,28,990/-/-விலையிலும் கிடைக்கும்.