• Download mobile app
13 Nov 2026, FridayEdition - 3929
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

November 13, 2026 தண்டோரா குழு

நவம்பர் 14 உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு,கோயம்புத்தூர் கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கே.எம்.சி.எச். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நவம்பர் 13 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. சர்க்கரை நோயைத் தடுப்பது, ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, முறையான சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமை வகித்து உரையாற்றினார்.சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் விழிப்புணர்வும், முறையான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவதும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக VHS மருத்துவமனையின் எண்டோகிரைனாலஜிஸ்ட் மற்றும் டயபெட்டாலஜிஸ்ட், DIWAS நிறுவனர் டாக்டர் உஷா ஸ்ரீராம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.சர்க்கரை நோயைத் தடுப்பதிலும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் முறையான மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கினார்.

தொடர்ந்து,கே.எம்.சி.எச். மருத்துவமனை இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் என். பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச். டயபெட்டாலஜிஸ்ட் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் டாக்டர் வித்யா ராஜீவ் ஜஹகீர்தார் வரவேற்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்வில், சர்க்கரை நோய் தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் நேரடியாக விளக்கம் அளித்தனர்.

இந்த கலந்துரையாடலில் டாக்டர் டி.ஆர். சிவஞானம்- – நீரிழிவு நோய் நிபுணர், கே.எம்.சி.எச், பேராசிரியர் டாக்டர் எஸ். உஷா – பொது மருத்துவத் துறைத் தலைவர், கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, டாக்டர் ஜி. விக்ரமன் – சிறுநீரக மருத்துவ நிபுணர், கே.எம்.சி.எச், டாக்டர் சுஜாய் நிகில் – இருதயவியல் நிபுணர், கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, டாக்டர் லிஜோ வர்கீஸ் – இருதயவியல் நிபுணர், கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, டாக்டர் உஷா ஸ்ரீராம் – எண்டோகிரைனாலஜிஸ்ட் மற்றும் டயபெட்டாலஜிஸ்ட், VHS மருத்துவமனை, கே.எம்.சி.எச் மருத்துவமனையின் டயபெட்டாலஜிஸ்ட் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் டாக்டர் துரைராஜ் அர்ஜுனன், டாக்டர் சங்கர் தண்டபாணி மற்றும் டாக்டர் வித்யா ராஜீவ் ஜஹகீர்தார் ஆகிய மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, உடல் எடை பராமரிப்பு, இரத்தச் சர்க்கரை பரிசோதனையின் அவசியம் மற்றும் தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவில் கே.எம்.சி.எச். டயபெட்டாலஜிஸ்ட் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் டாக்டர் சங்கர் தண்டபாணி நன்றியுரை வழங்கினார். “சர்க்கரை நோயைத் தடுப்போம்; ஆரம்பத்திலேயே கண்டறிவோம்; முறையாகக் கட்டுப்படுத்துவோம்” என்ற விழிப்புணர்வு செய்தியை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க