• Download mobile app
30 Sep 2026, WednesdayEdition - 3885
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடிசியாவில் தேசிய அளவிலான “ரா மேட் இந்தியா 2026 “கண்காட்சி – வருகிற 6-ந் தேதி தொடங்கி 8ந்தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது

September 30, 2026 தண்டோரா குழு

கோவை கொடிசியாவில் தேசிய அளவிலான
“ரா மேட் இந்தியா 2026 “கண்காட்சி – வருகிற 6-ந் தேதி தொடங்கி 8ந்தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது.

இது குறித்து ” ரா மேட் இந்தியா 2026 ” சேர்மன் ஸ்ரீதர் கொடிசியா தலைவர் ரங்கசாமி செயலாளர் விஜெய் ஆனந்த் விழா உதவி தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் கூறியதாவது:-

கோவை கொடிசியாவில் 5-வது பதிப்பாக தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் அதற்கு தேவையான ஆதார வளங்கள் குறித்த “ரா மேட் இந்தியா 2026” கண்காட்சியானது வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

வருகிற 8-ந்தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் குஜராத் மராட்டியம் கேரளா கர்நாடகா தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்கள் பங்கேற்கின்றன
இந்த கண்காட்சியில் 75க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன.

இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் வணிக பார்வையாளருக்கு அணுமதி இலவசம்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க