• Download mobile app
14 Nov 2026, SaturdayEdition - 3930
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் பரிசோதனைக்காக AI தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் முதல் மொபைல் செயலி – AGs Healthcare அறிமுகம்

November 14, 2026 தண்டோரா குழு

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சுகாதாரச் சவால்களில் ஒன்றாக சர்க்கரை நோய் (Diabetes) உருவெடுத்துள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சர்க்கரை நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 853 மில்லியனாக (85.3 கோடி) உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல், AGs Healthcare நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை நோய் மற்றும் பிற இணை நோய்களைத் தடுப்பதற்கும், அவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்குமான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை ஊக்குவித்து வருகிறது.

இதனை மேலும் சிறப்பான முறையில், அதிகப்படியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இன்றைய நவீன உலகில் அனைவரும் விரும்பும் எளிய மற்றும் பயனுள்ள மொபைல் செயலியை, ஒரே இடத்தில் அனைத்து தடுப்பு சுகாதாரச் சேவைகளையும் பெறக்கூடிய வகையில் உருவாக்க AGs Healthcare முன்வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்பு சுகாதாரப் பராமரிப்புக்கான மொபைல் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொபைல் செயலியின் முக்கிய சிறப்பம்சங்கள்:

மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்தவுடன், பயனர்கள் தங்களது வயது மற்றும் இணை நோய்களின் அடிப்படையில் பொருத்தமான முழுமையான உடல் நலப் பரிசோதனைத் தொகுப்புகளை (Master Health Check-up Packages) முன்பதிவு செய்யலாம்.

இதில் இடம்பெற்றுள்ள மற்றொரு சிறப்பம்சம் ‘GIFT OF LIFE’ (வாழ்வின் பரிசு) என்ற உன்னதமான முயற்சியாகும். இதன் மூலம், வெளிநாடுகளில் வசிக்கும் நமது அன்புக்குரிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட, நம்முடைய பிறந்தநாள் அல்லது பிற முக்கியமான சிறப்பு நாட்களில் முழுமையான உடல் நலப் பரிசோதனைத் தொகுப்பை பரிசாக வழங்க முடியும். உண்மையில், ஆரோக்கியத்தைவிட சிறந்த பரிசு வேறென்ன இருக்க முடியும்?

மேலும்,தங்களுக்குத் தேவையான பரிசோதனைகளைத் தனிப்பயனாக்க விரும்புவோருக்காக ‘Customise’ என்ற வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயனர்கள் தேர்வு செய்தவுடன், AGs Healthcare பிரதிநிதியை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியும். அவர் தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கி, அவர்களின் தேவைக்கேற்ப பரிசோதனைத் தொகுப்பை வடிவமைத்துத் தருவார்.

இதன் மூலம், நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மனரீதியான மற்றும் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க AGs Healthcare முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
உடல் நலப் பரிசோதனைத் தொகுப்புகளுடன் மட்டுமல்லாமல், ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் இமேஜிங் சேவைகள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் இந்தச் செயலியில் தனித்துவமான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான Chatbot மூலம், நோயாளிகள் தங்களுக்குத் தேவையான ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ இமேஜிங் சேவைகள் குறித்து நெறிமுறைகளுக்கு உட்பட்ட, தெளிவான தகவல்களைப் பெற முடியும்.

நோயாளிகளின் வசதிக்காக, இந்தச் செயலியில் பிரத்யேக Marketplace வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ ஆலோசனைகள், ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் எக்ஸ்-ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், ECHO, ECG உள்ளிட்ட இமேஜிங் மற்றும் நோயறிதல் சேவைகளை எளிதாக முன்பதிவு செய்யலாம்.

நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, செயலியில் SOS என்ற அவசரகால உதவி வசதியும் இடம்பெற்றுள்ளது. கடுமையான மருத்துவ அவசரநிலைகளின்போது, நோயாளிகள் SOS பொத்தானை அழுத்துவதன் மூலம் ஆம்புலன்ஸ் சேவையைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு உடனடியாக உதவி பெற முடியும்.

இறுதியாக,நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்தச் செயலியில் தனித்துவமான விழிப்புணர்வுப் பிரிவும் (Awareness Wing) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சர்க்கரை நோய் பரிசோதனையின் முக்கியத்துவம், முழுமையான உடல் நலப் பரிசோதனையின் அவசியம் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.எதிர்காலத்தில் இப்பிரிவில் மேலும் பல பயனுள்ள மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்ட சுகாதாரத் தகவல்களைச் சேர்க்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு AGs Healthcare மற்றும் Master Health Check-up Center நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவரான டாக்டர் ஆதித்யன் குகன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர், சாய்பாபா காலனி, ஸ்ரீ நாராயண குரு சாலையில் அமைந்துள்ள AGs Healthcare வளாகத்தில், 2026 நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தனிப்பட்ட நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இந்த மொபைல் செயலியின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய செயலி உருவாக்குநர் லோகியும் கலந்துகொண்டு, நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க