• Download mobile app
14 Nov 2026, SaturdayEdition - 3930
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடிசியவில் வாகனங்கள் தொடர்பான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி துவக்கம்

November 14, 2026 தண்டோரா குழு

தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் சார்பாக வாகனங்கள் தொடர்பான கோவை ஆட்டோ ஷோ எனும் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது.

ஆறாவது எடிஷனாக நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து முன்னனி நிறுவனங்களின் இரண்டு சக்கர வாகனங்கள்,கார்கள், மற்றும் கனரக வாகனங்கள் தொடர்பான அனைத்தும் ஒரே கூரையின் கீழ் காட்சி படுத்தப்பட்டுள்ளன..

நவம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியின் துவக்க விழா தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் மதிபாலன் மற்றும் கோவை ஆட்டோ ஷோ தலைவர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சர்வதேச அளவிலான பாரதீய வித்யா பவன் துணை தலைவரும்,குமரகுரு கல்வி குழுமங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக ஜி.ஆர்.ஜி.கல்வி குழுமங்களின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி குத்து விளக்கேற்றினார்.ஆறாவது எடிஷனாக நடைபெறும் இந்த கண்காட்சியில்,இந்தியா மட்டுமின்றி வெளநாடுகளில் இருந்தும் வாகனங்கள் தொடர்பான அனைத்து துறை சார்ந்த பல முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.

இந்த கண்காட்சியில் இந்தியாவில் முன்னணியில் உள்ள அசோக் லைலேண்ட் (ASHOK LEYLAND),பென்ஸ், டொயோட்டா, வால்வோ, ஸ்கோடா (SKODA), HYUNDAI, MG மோட்டார்ஸ், TATA மோட்டார்ஸ், மகேந்திரா உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.

மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள், புதிய மாடல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உயர்தர பேட்டரி மற்றும் ஆயில் தயாரிப்பு நிறுவனங்களும் பங்கேற்று உள்ளன.

நவீன வாகனங்களுக்கான உதிரி பாகங்களும்,வாகன அழகு படுத்துதல் தொடர்பான அரங்குளும் அமைந்துள்ளன..
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கபடுவார்கள் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

மேலும் படிக்க