• Download mobile app
15 May 2026, FridayEdition - 3747
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு குழந்தைகள் தேசிய அளவிலான அழகிப் போட்டியில் சாதனை: தாய்லாந்து சர்வதேச போட்டிக்குத் தேர்வு!

May 15, 2026 தண்டோரா குழு

Fashion Runway நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான ‘ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல்'(Junior Model International India Finals) இந்திய அளவிலான இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.

மே 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கேரளாவின் கோழிக்கோடு நகரில் நடைபெற்றஇந்த தேசிய அளவிலான போட்டியில்,தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான குழந்தைகள் பங்கேற்றனர்.முன்னதாக கோயம்புத்தூர்,திருப்பூர்,ஈரோடு,சென்னை, கோவில்பட்டி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தமிழ்நாடு ஸ்டேட் டைரக்டர் M.சிவகுமார் தலைமையில் கடுமையான ஆடிஷன்கள் நடத்தப்பட்டு,இறுதிப் போட்டிக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த S. ரக்ஷன் (1st Runner Up – 2027 International Next Top Model India), திவித் A.(2nd Runner Up & Best in Suits Winner),ஜோன்னா V (SR TOD – 1st Runner Up & Little Mr United World – Turkey) மற்றும் I. அத்னான் (Junior Glam Universe India & JMI – Prince Of Tamilnadu) ஆகியோர் தேசிய அளவில் முக்கிய பட்டங்களை வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வெற்றியாளர்கள் அனைவரும்,வரும் ஆகஸ்ட் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் 2026’ உலகளாவிய இறுதிப்போட்டியில் இந்தியாவை அதிகாரப்பூர்வமாகப் பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த குழந்தைகள் அழகிப் போட்டியில் அறிமுகம் மற்றும் நேர்காணல், திறமை, பாரம்பரிய உடை, மற்றும் ‘பால் கவுன்/சூட்’ உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் இடம்பெறவுள்ளன. குழந்தைகளின் தன்னம்பிக்கை, தொடர்புத்திறன் மற்றும் மேடை ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர்.

இச்சாதனை குறித்துப்பேசிய மாநில இயக்குநர் M.சிவகுமார்,

தமிழகக் குழந்தைகள் உலக அரங்கில் தடம் பதிக்கத்தயாராக இருப்பது மிகுந்த பெருமையளிப்பதாகக் கூறினார். குழந்தைகளின் ஒழுக்கம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய அனுபவத்தை வளர்க்கும் சிறந்த தளமாக இப்போட்டி தொடர்ந்து விளங்கி வருகிறது என்றார்.

மேலும் படிக்க