• Download mobile app
15 Nov 2026, SundayEdition - 3931
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 2-வது சுற்று தொடக்க நாளில் கடைசி நேர திருப்பங்களுடன் தொடங்கியது

November 15, 2026 தண்டோரா குழு

கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் சிடிஆர்-ஜேகே டயர் இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026-ன் இரண்டாவது சுற்று சனிக்கிழமை விறுவிறுப்பாகத் தொடங்கியது. முதல் நாளிலேயே கடைசி சுற்றுப் போராட்டங்களும், த்ரில் வெற்றிகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

எஃப் 1300 நோவிஸ் கோப்பை: மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில், 5-வது இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்கிய அகஸ்டின் பாபி (DTS ரேசிங்) சிறப்பாக ஓட்டி, ஷத்வீர் ஷெட்டியை வெறும் 0.032 வினாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றார். பிரணவ் ராமசாமி 3-வது இடம் பிடித்தார்.எல்ஜிபி ஃபார்முலா 4: 15 சுற்றுகள் கொண்ட இப்பந்தயத்தில், கடைசி இரண்டு சுற்றுகள் இருந்தபோது சக அணி வீரர் ஆர்யா சிங்கை முந்தி மெஹுல் அகர்வால் (டார்க் டான் ரேசிங்) முதலிடம் பிடித்தார். துருவ் கோஸ்வாமி 3-வது இடம் பெற்றார். புதுமுக வீரர்கள் பிரிவில் ஆதித்யா பட்நாயக் முதலிடம் பிடித்தார்.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை: அமெச்சூர் பிரிவில் இரண்டு முறை போட்டி நிறுத்தப்பட்டாலும், கபீர் சஹோச் சிறப்பாக ஓட்டி சௌரவ் சஞ்சய் டேயை வீழ்த்தி வெற்றி பெற்றார். கடைசி சுற்றில் ஏற்பட்ட மோதலால் பிராண்டன் டிசோசா 3-வது இடம் பிடித்தார். புரோ பிரிவில் பெங்களூரு வீரர் அனிஷ் ஷெட்டி எளிதாக முதலிடம் பிடிக்க, செந்தில் குமார் 2-வது இடமும், நவநீத் குமார் 3-வது இடமும் பெற்றனர்.

ஜேகே டயர் லெவிட்டாஸ் கோப்பை: ஜென்டில்மேன் பிரிவில் மும்பை வீரர் பிரதீக் சோனாவனே இரண்டு பந்தயங்களிலும் முதலிடம் பிடித்து இரட்டை வெற்றி பெற்றார். அதேபோல், புதுமுக வீரர்கள் பிரிவில் கவீன் ராஜபக்சே இரண்டு போட்டிகளிலும் வென்று அசத்தினார்.சூப்பர் சலூன் & டூரிங் கார்ஸ்: இந்தியன் சூப்பர் டூரிங் கார்ஸ் பிரிவில் அர்ஜுன் நரேந்திரன் முதலிடமும், பிரேன் பிதாவாலா 2-வது இடமும், அர்ஜுன் பாலு 3-வது இடமும் பிடித்தனர். இந்தியன் டூரிங் கார்ஸ் பிரிவில் பாலபிரசாத் ஏ முதலிடம் பெற்றார்.

இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ்: முதல் பந்தயத்தில் ஸ்ரீனிவாஸ் தேஜா வெற்றி பெற்றார். இரண்டாவது பந்தயத்தில், கடைசி சுற்றில் ஏற்பட்ட விறுவிறுப்பான போட்டியில் தேஜாவை முந்தி தீபக் ரவிகுமார் 0.308 வினாடிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றார்.சூப்பர் ஸ்டாக்: இப்பிரிவில் நடந்த இரண்டு பந்தயங்களிலும் தில்ஜித் டி.எஸ் முதலிடம் பிடித்து இரட்டை வெற்றியைப் பதிவு செய்தார்.

மேலும் படிக்க