• Download mobile app
17 May 2026, SundayEdition - 3749
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அமையவிருக்கும் திருப்பதி கோயில்: ஜி ஸ்கொயர் குழுமம் 19.43 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாரியத்திடம் ஒப்படைத்தது

May 17, 2026 தண்டோரா குழு

தமிழ்நாட்டு பக்தர்களுக்கு ஆன்மீகரீதியான ஒரு முக்கிய மைல்கல்லாக, கோவையில் உள்ள கோவைப்புதூரில் உள்ள ‘ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் சிட்டி’ வளாகத்தில் அமைய முன்மொழியப்பட்டுள்ள புதிய கோயில் திட்டத்திற்காக, 19.43 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை ஜி ஸ்கொயர் குழுமம் மே, 14 அன்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.

இப்பகுதியில் அமையவுள்ள கோயில் பணிகளில் இது ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக அமைந்துள்ளது.சமீபத்தில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில், ஸ்ரீ பி.ஆர். நாயுடு தலைமையில் நடைபெற்ற டிடிடி வாரியக் கூட்டத்தில், கோவையில் புதிய கோயில் கட்டுவதற்காக ஜி ஸ்கொயர் குழுமம் தானமாக வழங்கிய ரூ.388 கோடி மதிப்பிலான 19.43 ஏக்கர் நிலத்தைப் பெற்றுக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே ஜி ஸ்கொயர் குழுமம் தானமாக வழங்கும் இந்த நிலத்தை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தற்போது நிலம் கையெழுத்திட்டு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சொத்து அதிகாரப்பூர்வமாக வாரியத்தின் சொத்தாக மாறியுள்ளது. கோயிலுக்கான திட்டமிடல் மற்றும் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திருப்பதி கோயில்,மேற்கு தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக உருவெடுக்கும் என்றும், வளர்ந்து வரும் ஆன்மீக மற்றும் கலாச்சார மையமாக கோயம்புத்தூரை முன்னிலைப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக மற்றும் உணர்வுப்பூர்வமான செய்தியாக அமைந்துள்ளது.

பல ஆண்டுகளாக, கோயம்புத்தூர் தொழில் வளர்ச்சியையும் ஆன்மீகம் மற்றும் நல்வாழ்வையும் ஒருங்கே இணைக்கும் ஒரு நகரமாக தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.. ஈஷா யோகா மையம், மருதமலை முருகன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் ஆதியோகி போன்ற புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்குப் பெயர் பெற்ற இந்த நகரம், ஆண்டு முழுவதும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் மற்றும் சர்வதேசப் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த டிடிடி கோவில், கோயம்புத்தூர் மாநகரத்தின் ஆன்மீகச் சூழலை மேலும் மேம்படுத்துவதோடு, தென்னிந்தியாவின் ஒரு முக்கியமான புனித யாத்திரை மையமாக அதன் நற்பெயரை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்டுள்ள கோயிலுக்கான நிலம் ஒப்படைக்கும் நடைமுறைகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் மாதங்களில் கோயிலின் வரைபடம், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோயம்புத்தூரை ஒரு வளர்ந்து வரும் ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுலாத் தலமாக சர்வதேச அளவில் முன்னிறுத்தும்.

மேலும் படிக்க