• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தூர் மைதானத்தில் பவுலர்களுக்கு ‘நோ-எண்ட்ரி’!

April 21, 2017 tamilsamayam.com

மும்பை, பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் இரு அணி வீரர்கள் சேர்ந்து மொத்தமாக 264 ரன்கள் விளாசினர்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் இந்தூரில் நடந்த 22வது லீக் போட்டியில், மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின.

இதில் மும்பை அணி, பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதில் இரு அணி பேட்ஸ்மேன்கள் சேர்ந்து பவுலர்களுக்கு மைதானத்திற்கு வெளியே நோ எண்ட்ரி போர்டு போட்டனர்.

இரு அணி பேட்ஸ்மேன்கள் சேர்ந்து மொத்தமாக 30 பவுண்டரி (120 ரன்கள்) + 24 சிக்சர்கள் (144 ரன்கள்) என ஒட்டுமொத்தமாக 264 ரன்கள் பவுண்டரிகளிலேயே எடுத்தனர்.

எல்லாமே சிக்சர்:

மும்மை வீரர் நிதிஷ் ரானா, பஞ்சாப் அணிக்கு எதிராக மொத்தமாக 7 சிக்சர்கள் விளாசினார். ஆனால் இவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் பவுண்டரிகள் அடிக்காமல், 7 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

மும்பைக்கு எதிராக மூன்றாவது மகாராஜா:

மும்பை அணிக்கு எதிராக 26 ரன்கள் எடுத்த பஞ்சாப் வீரர் மார்ஷ், ஐபிஎல் அரங்கில் மும்பை அணிக்கு எதிராக 500 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார். இப்பட்டியலில் குஜாராத் கேப்டன் ரெய்னா (707 ரன்கள்), புனேவின் தோனி (524) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 77 ரன்கள் விளாசிய மும்பை வீரர் பட்லர், டி-20 அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் முதல் ஆறு ஓவரில் மும்பையின் பட்லர், பார்த்தீவ் ஜோடி 82 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் ஆறு ஓவரில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது.

மும்பை அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்திய பஞ்சாப் வீரர் ஆம்லா, மலிங்கா பந்தில் மட்டும் 51 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஒரு ஐபிஎல் போட்டியில் ஒரு வீரருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி (எதிர்-உமேஷ், 52 ரன்கள்) தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

12 பந்தில் 50 ரன்கள்:
மும்பை அணிக்கு எதிரான முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 15, 16 வது ஓவர்களில் மொத்தமாக 50 ரன்கள் விளாசியது.

மேலும் படிக்க