• Download mobile app
29 Aug 2026, SaturdayEdition - 3853
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் – கவிஞர் கவிதாசன்

August 29, 2026 தண்டோரா குழு

இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என்று சிந்தனை கவிஞர் கவிதாசன் தெரிவித்தார்.

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு நூல்கள் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது.இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என விழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் உரையாற்றினார்.

கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘வெற்றிப் படிக்கட்டுகள்’, ‘வெற்றியின் விதைகள் 100’, ‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெற்றிப்பாதை’ ஆகிய நான்கு நூல்களின் அறிமுக விழா கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர்.வி. ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் முனைவர் விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார்.கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

‘வெற்றிப்பாதை’ நூலுக்கு கோவை பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சச்சிதானந்தர், இதிகாச மாமணி முனைவர் முருகேசன் அறிமுக உரையாற்றினர்.
மன்னார்குடியைச் சேர்ந்த தமிழ் இலக்கிய ஆய்வறிஞரும் நூலாசிரியருமான பத்மாவதி, ‘வெற்றிப் படிக்கட்டுகள்’ நூல் குறித்தும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கருணாநிதி, ‘வெற்றியின் விதைகள் 100’ நூல் குறித்தும் அறிமுக உரையாற்றினர்.

அதே பள்ளியின் தமிழாசிரியர் முனைவர் பொன். சங்கர்,‘சிகரம் தொடு’ நூல் குறித்து அறிமுக உரையாற்றினார்.
விழாவில் நூல்களின் எழுத்தாளரும் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், சிந்தனைக் கவிஞருமான டாக்டர் கவிதாசன் பேசுகையில், இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கை முறையில் இளம் தலைமுறையினர் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்த வழிகாட்டுதலும், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் தற்போது குறைந்து வருவதால், சில நேரங்களில் இளைஞர்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்படுகிறது என்றார்.

எனவே, இளம் தலைமுறையினரிடம் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் வளர்க்க வேண்டியது அவசியம் என்றும், குறிப்பாக தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கும் புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“தொட்டுத் தொட்டுப் பார்த்தால் காகிதம்; தொடர்ந்து படித்தால் வெற்றியின் ஆயுதம்” என்ற கருத்தை முன்வைத்த கவிதாசன், புத்தக வாசிப்பு அறிவை வளர்ப்பதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் என தெரிவித்தார்.

நான்கு நூல்களின் அறிமுக விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க