• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் பள்ளியில் ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ விளையாட்டு விழா – ஜத்தன் ஹவுஸ் ஒட்டுமொத்த சாம்பியன்

August 30, 2026 தண்டோரா குழு

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (ஆர்.பி.எஸ்.) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டு விழா ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவிற்கு ‘ஹோஷ் அஜைல்’ மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்ட்டின் தேவபிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.நிகழ்ச்சியில் ரத்தினம் குழுமத்தின் இயக்குநர் ஷிமா செந்தில், பள்ளி முதல்வர் ஆஷ்மி,தலைமை செயல்பாட்டு அலுவலர் அபிநயா சங்கரி மற்றும் வணிக வளர்ச்சி மேலாளர் கார்த்தி பழனிவேலு ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.

காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இவ்விழாவில், நர்சரி முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவியர் சிலம்பம், டேக்வாண்டோ,ஏரோபிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூம்பா உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி சாகசங்களையும், தடகளப் போட்டிகளையும் திறம்பட நிகழ்த்திக் காட்டினர்.
போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவியருக்குத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பள்ளியின் இல்லங்களுக்கு (ஹவுஸ்) இடையே நடைபெற்ற போட்டிகளில் ஜத்தன் ஹவுஸ் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க