• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் – ராகுல் டிராவிட்

January 22, 2019 தண்டோரா குழு

இந்திய அணியின் இளம் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல்ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதை பெரிதாக்க வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இந்தியில் புகழ்பெற்ற தனியார் தொலைகாட்யின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் கரண் ஜோஹர் பல கேள்விகளை கேட்டார். அதற்கு வெளிப்படையான பதில்களை இருவரும் கொடுத்தனர். அப்போது பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாண்ட்யா சார்பில் பதில்
அளிக்கப்பட்டது.

பாண்ட்யா மற்றும் கே. எல்.ராகுலை 2 தொடர்களில் விளையாடுவதற்கு தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இருவரும் இந்தியா திரும்பினர். மேலும் பாண்டியாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்திக்கொண்ட நிறுவனங்களும் அதனை ரத்து செய்தனர். இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பேசி உள்ளார்.

அவர் கூறுகையில்,

“கிரிக்கெட் வீரர்கள் முன்பு தவறுகள் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. இனி வரும் காலங்களில் தவறுகள் நடைபெறாது என்றும் கூற முடியாது. ஆனால் இளைஞர்களுக்கு நாம் தான் சில விஷயங்களை கற்றுத்தரவேண்டும். இதனைப் பெரிதாக்க வேண்டாம்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க