• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் !

February 8, 2019 தண்டோரா குழு

2019 ஐசிசி உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு துணை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ‘ரிக்கி பாண்டிங்’ அறிவிக்கப்பட்டுள்ளார்

டேவிட் சாகெர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியின் உதவிப்பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தலைமை பயிற்சியாளரான ‘ஜஸ்டின் லாங்கருடன்’ இணைந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். வரவிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு பாண்டிங் உதவிப்பயிற்சியாளராகப் பொறுப்பேற்கிறார். அடுத்தடுத்து நடக்க இருக்கும் முக்கிய தொடர்களில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவரை திரும்ப பயிற்சியாளராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

2003 மற்றும் 2007 ஆகிய உலகக்கோப்பையை பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற ரிக்கி பாண்டிங் தொடர்ந்து பல அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு கூட இங்கிலாந்து அணிக்கு துணை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் மேலும் ஆஸ்திரேலிய அணி கலந்து கொண்ட பல T20 போட்டிகளில் கூட அவர் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதுமட்டுமின்றி ஐபிஎலில் “டெல்லி கேப்பிடல்ஸ்” அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இது குறித்து பாண்டிங் கூறும்போது,

“உலகக்கோப்பைக்காக மீண்டும் அணியுடன் இணைவது உற்சாகமூட்டுகிறது, முன்பு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுடன் குறுகிய காலத்திற்காக பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். ஆனால் உலகக்கோப்பை என்பது எனக்கு வேறு பொருள் தருகிறது, தேர்வாளர்களுக்கு தற்போது தேர்வு செய்ய கிடைத்திருக்கும் வீரர்கள் மீது எனக்கு அசையாத நம்பிக்கை உள்ளது இந்த உலகக்கோப்பையில் எங்களை வீழ்த்துவது கடினம் எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் லாங்கர் கூறும்போது,

“இதற்கு முன்பு நானும் ரிக்கியும் பல முறை இணைந்து பணியாற்றி உள்ளோம். உலக கோப்பைகளை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது ரிக்கிக்கு நன்றாக தெரியும். பேட்டிங் மட்டும் இல்லாமல் கீப்பிங்கிற்கும் அவர் சிறப்பாக பயிற்சி அளிக்க கூடியவர். இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்ல சிறப்பாக பயிற்சியளிப்போம்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க