• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திட்டமிட்டபடி சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறும் –  – ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா

April 9, 2018 தண்டோரா குழு

திட்டமிட்டபடி சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறும்  என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் தமிழகமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்ய வேண்டும் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டி நடைபெற்றால் வீரர்களை சிறை பிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதனால் சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பி.எல். தலைவர் ராஜிவ் சுக்லா, சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை.   ஐபிஎல் போட்டிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அரசியல் சர்ச்சைகளுக்குள் ஐ.பி.எல். போட்டிகள் கொண்டுவரக்கூடாது என்றும் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க