• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி அறிவிப்பு

September 21, 2022 தண்டோரா குழு

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் போட்டி அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.இந்நிலையில், ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிதொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணியில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாகூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

மேலும் படிக்க