• Download mobile app
01 Aug 2026, SaturdayEdition - 3825
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா !

March 14, 2026 தண்டோரா குழு

கோவை அருகே செயல்பட்டு வரும் ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் அவர் பேசுகையில்,

“நீங்கள்தான் நாளைய தலைவர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு அடிப்படை பட்டம் மட்டும் போதாது. தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலம் தான் முன்னேற்றம் பெற முடியும். விஞ்ஞானமும் மனித ஆற்றலும் வளர வளர, நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன.அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தொடர்ந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விழாவில் 252 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் அஜித் குமார் லால் மோகன், கல்லூரி இயக்குனர் பிந்து அஜித், கல்லூரி முதல்வர் எஸ். ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க