• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“இந்திய மகளிர் சக்திக்கு நிகர் எதுவும் இல்லை”;“நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்” – நீதிபதி எஸ். ஸ்ரீமதி உரை

March 15, 2026 தண்டோரா குழு

திருப்பூரில் செயல்பட்டு வரும் KPR மில் லிமிடெட் நிறுவனத்தின் KPR பெண் ஊழியர்கள் கல்வி மையம் சார்பில், பணியாற்றிக்கொண்டே உயர்கல்வி பயின்ற பெண் ஊழியர்களுக்கான 12வது பட்டமளிப்பு விழா இன்று திருப்பூரில் உள்ள Quantum Knits–3 அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு KPR மில் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ஆர். ஆனந்தகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி எஸ். ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 618 பெண் ஊழியர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் அவர் பேசுகையில்,

“ஒரு காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வளர்ச்சி அடையாது என்று கூறப்பட்டாலும் இன்று அந்த நிலை மாறிவிட்டது. இந்தியா போன்ற நாடுகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாட்டில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகரிக்க வேண்டும். நாம் இறக்குமதி செய்யும் பல பொருட்களை நாமே தயாரித்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்,” என்றார்.

மேலும் பெண்கள் வாழ்க்கையில் வரும் சவால்களை தைரியமாக எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்றும், குடும்பத்தினரின் நம்பிக்கையை மதித்து முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஊக்கப்பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் சென்னை இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள துணைத் தலைவர் ஜே. சுஜித்குமார் வாழ்த்துரை வழங்கினர்.இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 618 பெண் ஊழியர்கள் பட்டம் பெற்றனர். இவர்களில் 17 பேர் பல்கலைக்கழக தரவரிசை பெற்றுள்ளனர். அதில் முதல் நிலை 5 பேர், இரண்டாம் நிலை 4 பேர், மூன்றாம் நிலை 8 பேர் அடங்குவர். இந்த 17 மாணவிகள் கடந்த 2025 செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை நகரில் நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளனர்.

மேலும் 2021–2024 கல்வியாண்டில் KPR நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் 74 பெண் ஊழியர்கள் தங்களது படிப்புகளில் முதன்மை பெற்றுள்ளனர். KPR மில் லிமிடெட் நிறுவனத்தின் கல்வித் திட்டத்தின் மூலம் இதுவரை மொத்தம் 44,250 பெண் ஊழியர்கள் உயர்கல்வியை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,500 பெண் ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள், பட்டம் பெறும் மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மனிதவளத் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் KPR மில் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஈ.கே.சக்திவேல் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க