• Download mobile app
18 Sep 2026, FridayEdition - 3873
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டார் ஹெல்த்தின் ஏஎஸ்கே நாகர்கோவில் மையத்தில் இலவச மெகா மருத்துவ முகாம்! 350 பொதுமக்கள் நோய்த்தடுப்பு மருத்துவச் சேவைகளை பெற்றனர்

September 18, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தனது ஆரோக்கிய சேவா கேந்திரா (ஏஎஸ்கே) நாகர்கோவில் மையம் மூலம் விழிப்புணர்வு மற்றும் இலவச மெகா மருத்துவ முகாமை நடத்தியது.

இது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வணிகத் தலைவரும் நிர்வாக துணைத் தலைவருமான பாலாஜி பாபு சி தெரிவிக்கையில்,

இம்முகாமின் மூலம் சுமார் 350 பொதுமக்கள் நோய்த்தடுப்பு மருத்துவச் சேவைகளைப் பெற்றனர்.கன்னியாகுமரி மருத்துவ மிஷன் மற்றும் நெய்யூர் சி.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாம் நாகர்கோவில், வடசேரி, ஆசம்பு சாலையில் உள்ள சத்யா மஹாலில் நடைபெற்றது. இம்முகாமை மாநகராட்சி ஆணையர் டி. ஆர். ஐஸ்வர்யா மற்றும் இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் கே. விஜயகுமார், எம்.டி., ஆகியோர் முன்னிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் தொடங்கி வைத்தார்.

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் சார்பில் வணிகத் தலைவரும் நிர்வாக துணைத் தலைவருமான பாலாஜி பாபு சி, சிஎஸ்ஆர் தலைவர் டாக்டர் தினேஷ் ராஜ் கே.எஸ், மதுரை மண்டலத் தலைவர் வினோத் பால் மற்றும் திருநெல்வேலி உதவி மண்டலத் தலைவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த முகாம், நோய்த் தடுப்புப் பரிசோதனைகள் மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகளை ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இதயவியல், எலும்பியல், மகப்பேறியல், குழந்தைகள் நலன் மற்றும் புற்றுநோயியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவ ஆலோசனைகளுடன், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, ஈ.சி.ஜி, கண் பரிசோதனை, மற்றும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளையும் பொதுமக்கள் இலவசமாகப் பெற்றனர்.

மேலும்,வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள், உடல்நல அபாயங்களை முன்னதாகவே கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

நாகர்கோவில்,வடசேரி,ஆசம்பு சாலை, முதல் தளத்தின் கதவு எண் 114-ல் அமைந்துள்ள ஸ்டார் ஹெல்த்தின் ‘ஆரோக்கிய சேவா கேந்திரா’ தொடர்ந்து மேற்கொண்டு வரும் சேவைகளின் தொடர்ச்சியாகவே இம்மருத்துவ முகாம் அமைந்தது. நாகர்கோவில் ஏஎஸ்கே மையம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 2,900-க்கும் மேற்பட்ட பயனாளிகள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2,100-க்கும் மேற்பட்ட ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 2,640-க்கும் மேற்பட்ட மருந்தகச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 180 பேருக்கு நியூமோகாக்கல் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க