• Download mobile app
15 Sep 2026, TuesdayEdition - 3870
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செப். 27-ல் ‘Run for Little Hearts’ மாரத்தான் இருதய குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ 4-வது பதிப்பு

September 15, 2026 தண்டோரா குழு

இருதய குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், GKNM மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் ‘Run for Little Hearts’ மாரத்தான் 4-வது பதிப்பு வரும் செப்டம்பர் 27-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் மற்றும் உலக இருதய தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த மேரத்தான், பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.இதில் 1 கி.மீ., 3 கி.மீ., 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. என பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. 5 மற்றும் 10 கி.மீ. பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கோவை மாவட்ட தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இந்த மேரத்தானுக்கு LMW,லட்சுமி மில்ஸ், லட்சுமி கார்டு குளோதிங், ப்ளூ டாலியா, பிரீமியர் ஃபைன் லினன்ஸ், LEED, பிரிகாட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவு அளிக்கின்றன. சோடெக்ஸோ நிகழ்வின் உபசரிப்பு பங்காளராக உள்ளது.

மாரத்தானுக்கான டி-ஷர்ட் மற்றும் பதக்கம் அறிமுக விழா செப்டம்பர் 15-ம் தேதி GKNM மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய GKNM மருத்துவமனை முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, கடந்த ஆண்டு நடைபெற்ற மேரத்தானில் சுமார் 3,000 பேர் பங்கேற்றதாகவும், திரட்டப்பட்ட நிதி மூலம் இருதய குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 42 குழந்தைகள் பயனடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும்,GKNM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் தொடர்ந்து இந்த மேரத்தானில் பங்கேற்று வருவதாகவும், குழந்தைகள் இருதய சிகிச்சை மற்றும் குழந்தைப் புற்றுநோயியல் துறைகளில் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க