• Download mobile app
15 Sep 2026, TuesdayEdition - 3870
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சூயஸ் 24×7 குடிநீர் திட்ட அலுவலகத்தில் வினாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

September 15, 2026 தண்டோரா குழு

கோவையில் உள்ள சூயஸ் 24×7 குடிநீர் திட்ட அலுவலகத்தில் வினாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திட்டக் குழுவினர் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஒன்றிணைந்து, சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டனர்.பாரம்பரிய முறைப்படி நடந்த இந்தப் பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். வழக்கமான வேலைகளிலிருந்து சற்று விடுபட்டு, சக ஊழியர்கள் ஒன்றாகச் சிறிது நேரம் செலவிட்டதால் அலுவலகம் முழுவதும் பண்டிகைக் களையுடன் காணப்பட்டது.

கோவை சூயஸ் 24×7 குடிநீர் திட்டத்தின் முதுநிலை மேலாளர் புனிதகுமரன் கூறுகையில், “வழக்கமான பணிகளைத் தாண்டி நாம் அனைவரும் இணைந்து மகிழ பண்டிகைகள் வாய்ப்பளிக்கின்றன. வினாயகர் சதுர்த்தி என்பது நம்மில் பலருக்கும் ஒரு சிறப்பான நாளாகும். அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஊழியர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்று கூறினார்.

இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.நமது பாரம்பரியப் பண்பாட்டைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அலுவலகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விழாவை கொண்டாடியது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தாக இதில் கலந்து கொண்ட அனைவரும் தெரிவித்தனர்.

வினாயகர் சதுர்த்தி நன்னாளில் அனைவருக்கும் சூயஸ் நிறுவனம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் படிக்க