• Download mobile app
14 Sep 2026, MondayEdition - 3869
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜே.கே டயர் வழங்கும் இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் 2026 கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் எப்4 இந்திய சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் ஆரிஸ் கிரியாகோவ் வெற்றி

September 14, 2026 தண்டோரா குழு

ஜே.கே டயர் வழங்கும் இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் 2026, கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் விறுவிறுப்பாகத் தொடங்கியது. இதில் முக்கிய போட்டியான எப்4 இந்திய சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று நடைபெற்றது.

மொத்தம் மூன்று பந்தயங்கள் நடந்தன; அனைத்திலும் வெற்றிபெறக் கடும் போட்டி நிலவியது. இந்த வார இறுதியில் கிச்சா’ஸ் கிங்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வீர்ர் ஆரிஸ் கிரியாகோவ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இரண்டு பந்தயங்களில் இரண்டாம் இடத்தையும், 3-வது பந்தயத்தில் வெற்றியும் பெற்று முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்தினார்.

நடந்த மூன்று பந்தயங்களில் ஏழு வெவ்வேறு வீர்ர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.இது எவ்வளவு கடுமையான போட்டி நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது.எப்4 இந்திய சாம்பியன்ஷிப்பின் 2-வது சுற்றும் இதே காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு சுற்றுகளைக் கொண்ட இத்தொடர் மற்ற நகரங்களுக்குச் செல்வதற்கு முன், வீரர்களுக்கு இங்கு மீண்டும் அதிகப் புள்ளிகளைப் பெற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரரான லுவிவே சம்புட்லா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கோவா ஏசஸ் ஜே.ஏ ரேசிங் அணிக்காக 8-வது இடத்தில் பந்தயத்தைத் தொடங்கிய அவர், முதல் நான்கு சுற்றுகளுக்குள்ளாகவே பலரை முந்திச் சென்று முதல் மூன்று இடங்களுக்குள் அதிரடியாக முன்னேறினார். போட்டியின் பாதியில் பாதுகாப்பிற்காக ‘சேப்டி கார்’ வந்ததால் வீரர்களுக்கு இடையிலான நேர இடைவெளி குறைந்தது. இது அவரது வெற்றி வாய்ப்பைப் பாதிப்பது போல் தோன்றினாலும், அவர் மனம் தளரவில்லை.

பந்தயத்தை 31 நிமிடங்கள் 05.808 வினாடிகளில் முடித்து அவர் முதல் இடத்தைப் பிடித்தார். ஆரிஸ் கிரியாகோவ் அவரை விட 2.245 வினாடிகள் பின்தங்கி இரண்டாம் இடத்தையும், முதல் இடத்தில் பந்தயத்தைத் தொடங்கிய ஆரோன் மேத்தா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணிக்காகக் களமிறங்கிய 15 வயதான சிங்கப்பூர் வீரர் ஆரோன் மேத்தா, ஒரு சுற்றை 1 நிமிடம் 05.652 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம், இப்போட்டி வரலாற்றில் முதல் இடத்தில் இருந்து பந்தயத்தைத் தொடங்கும் வாய்ப்பைப் பெற்ற மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை அடைந்தார்.

பந்தயத்தின் முடிவில் டயர்கள் தேய்ந்ததால் அவரால் அதே வேகத்தைத் தக்கவைக்க முடியவில்லை; அதனால் அவர் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இருப்பினும், அறிமுகப் போட்டியிலேயே 15 வயதில் வெற்றி பெற்று மேடை ஏறியிருப்பது ஒரு சிறப்பான சாதனையாகும். நேற்று நடைபெற்ற போட்டி மற்றொரு 15 வயது இளைஞரின் வசமானது. 2-வது பந்தயத்தில் முதல் இடத்தில் இருந்து போட்டியைத் தொடங்கிய கோவா ஏசஸ் ஜே.ஏ ரேசிங் அணியின் ஆர்யன் நரோலா, 26 சுற்றுகள் முழுவதும் ஆரிஸ் கிரியாகோவ் கொடுத்த கடும் நெருக்கடியைச் சிறப்பாகச் சமாளித்தார்.

முடிவில் வெறும் 0.624 வினாடிகள் வித்தியாசத்தில் நரோலா வெற்றி வாகை சூடினார். அவருக்கு அடுத்தபடியாக ஆரிஸ் கிரியாகோவ் மற்றும் ஸ்வர்ணவ் தாஸ் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம், சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரண்டாவது மிக இளம் வயது வெற்றியாளர் என்ற பெயரை நரோலா பெற்றுள்ளார். இருப்பினும், தனது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் சுற்றின் ‘மிகவும் மதிப்புமிக்க வீரராக’ ஆரிஸ் கிரியாகோவ் உருவெடுத்தார்.

3-வது பந்தயத்திலும் முதல் இடத்தில் இருந்து போட்டியைத் தொடங்கிய அவருக்கு, இந்த முறை வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. பந்தயத்தின் பெரும்பாலான நேரம் மஹ்லோரி மபுண்டா அவருக்கு மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்து விடாமல் நெருக்கடி கொடுத்தார். இந்த சவால்களை எல்லாம் முறியடித்த பிறகே கிரியாகோவ் முதலில் எல்லைக்கோட்டைக் கடந்தார். மேத்தா மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வார இறுதியின் முதல் பந்தயத்தில் வெற்றி பெற்ற சம்புட்லாவால் இந்த முறை 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

மேலும் படிக்க