• Download mobile app
13 Sep 2026, SundayEdition - 3868
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிலேயே முதன் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் நவீன ரோபோ தொழில்நுட்பம் கோவை ராயல் கேர் மருத்துவமனையில் அறிமுகம்

September 13, 2026 தண்டோரா குழு

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நான்காம் தலைமுறை ‘ஸ்ட்ரைக்கர் மாகோ 4 ஸ்மார்ட் ரோபோடிக்ஸ்’தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனத்தின் நவீன ரோபோ தொழில்நுட்பம்,இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஒட்டல் அரங்கில் நடைபெற்றது.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,தமிழகமக்கள் நல் வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய ஸ்ட்ரைக்கர் மாகோ ரோபோட்டிக் தொழில் நுட்பம் வாயிலாக பகுதி முழங்கால், முழு முழங்கால், இடுப்பு, தோள்பட்டை உள்ளிட்ட பல்வேறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை நோயாளிகளின் உடலமைப்புக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு, அதிக துல்லியத்துடன் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தமிழகம் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக இருந்து வருவது பெருமைக்குரியது என தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்படும் இதுபோன்ற நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் பயன்கள் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களை விரைவில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் பேசுகையில்,

நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் ராயல் கேர் மருத்துவமனை நவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் நடேசன் கூறுகையில், நோயாளியின் உடலமைப்புக்கு ஏற்ப அறுவை சிகிச்சையை திட்டமிடவும், சிக்கலான மறுமூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் அதிக துல்லியத்துடன் மேற்கொள்ளவும் இந்த ரோபோ தொழில்நுட்பம் உதவும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க