• Download mobile app
10 Sep 2026, ThursdayEdition - 3865
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

September 10, 2026 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயதான ராமர் என்பவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

ராமர் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 8-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி திருமதி. சாந்தி மற்றும் மகள் செல்வி. அனுதர்ஷினி ஆகியோர், ராமரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன், அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. கே.எம்.சி.ஹெச். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், தகுந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு உறுப்புகளை நோயாளிகளுக்கு பொருத்தினர்.

இதுகுறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில்,

“மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், அது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும். ராமரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் படிக்க