• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட SUV கார்களை டெலிவரி செய்து மாருதி சுசுகி சாதனை

September 9, 2026 தண்டோரா குழு

கோவையில் முதல்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV கார்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கோவை மாருதி சுசுகி டீலர்களான அம்பாள் ஆட்டோ, ஏபிடி, ஆதி மாருதி மற்றும் ஜெய்கிருஷ்ணா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாருதி சுசுகியின் கோவை ஏரியா மேனேஜர் தேவான்சு மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாடிக்கையாளர்களுக்கு கார் சாவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அம்பாள் ஆட்டோ நிர்வாக இயக்குநர் அனீஷ், ஆதி மாருதி நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், ஜெய்கிருஷ்ணா நிர்வாக இயக்குநர் பிரவீன் மற்றும் ஏபிடி சிஓஓ மது பண்ணாங் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், புதிய கார்களை டெலிவரி பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து தேவான்சு மான் கூறியதாவது:

“கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV வாகனங்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான மைல்கல்லாகும்.

புதிய பிரெஸ்ஸா மற்றும் மிட்-SUV பிரிவில் உள்ள விக்டோரிஸ் ஆகிய மாடல்களுக்கு கோயம்புத்தூர் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. SUV பிரிவில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைப்போம்,” என்றார்.

மாருதி சுசுகியின் டெரிட்டரி மேனேஜர் சாம் கூறியதாவது:

“கோயம்புத்தூரில் முதல்முறையாக இந்தப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட SUV கார்களை ஒரே நாளில் டெலிவரி செய்துள்ளோம். கோயம்புத்தூர் சந்தையில் SUV வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சந்தையில் விற்பனையாகும் வாகனங்களில் சுமார் 50 சதவீதம் SUV பிரிவைச் சேர்ந்தவை.

மாருதி சுசுகியின் விக்டோரிஸ் மற்றும் பிரெஸ்ஸா மாடல்கள் கோயம்புத்தூர் சந்தையில் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்,” என்றார்.

நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாருதி சுசுகி டெரிட்டரி மேலாளர்கள் சாம், ரோஹித் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க