September 18, 2026
தண்டோரா குழு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 800 க்கும் அதிகமான கிளைகள் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்ற உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் , புகழ்பெற்ற நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஆர்.மாதவனை தனது பிராண்ட் அம்பாசிடராகக் கொண்டு, ‘நத்திங் ஸ்மால் அபவுட் அஸ்’ (எங்களைப் பொறுத்தவரை எதுவும் சிறியதல்ல) என்ற தனது புதிய பிராண்ட் பிரச்சாரத்தின் வெளியீட்டை அறிவித்துள்ளது.
இந்த பிரச்சாரமானது, ஸ்மால்’ என்ற வார்த்தை, இந்த வங்கி முதன்மையாக சிறிய அளவிலான நிதித் தேவைகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது, வரையறுக்கப்பட்ட அளவிலான வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கொண்டுள்ளது, அல்லது சிறிய அளவில் செயல்படுகிறது என்ற தோற்றத்தை சில நேரங்களில் உருவாக்கக்கூடும் என்கிற ஒரு முக்கிய வாடிக்கையாளர் நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டது.
இன்றைய உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஐ முன்னிறுத்துவதன் மூலம் இந்தக் கண்ணோட்டத்தை நிவர்த்தி செய்ய ‘நத்திங் ஸ்மால் அபவுட் அஸ்’ (எங்களைப் பொறுத்தவரை எதுவும் சிறியதல்ல) பிரச்சாரம் முயல்கிறது.இந்த பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் இன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லக்ஷ்மன் வேலாயுதம் கூறியதாவது: “‘எங்களைப் பொறுத்தவரை எதுவும் சிறியதல்ல’ என்ற கருத்தானது, ஒரு மிகவும் உண்மையான வாடிக்கையாளர் நுண்ணறிவிலிருந்து உருவானது. ‘ஸ்மால்’ என்ற வார்த்தை சில நேரங்களில் எங்களது சேவைகள், பரிவர்த்தனை அளவுகள் அல்லது எங்கள் செயல்பாட்டின் அளவு ஆகியவை மட்டுப்படுத்தப்பட்டவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
ஒரு பரந்த கிளை வலையமைப்பு மற்றும் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விரிவான வங்கி மற்றும் கடன் தீர்வுகள் ஆகியவற்றின் ஒரு விரிவான வரம்புடன் இன்றைய உஜ்ஜிவன் அந்த கண்ணோட்டத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம், பல்வேறு நிதித் தேவைகளுக்கு சேவை செய்யும் அளவு, வரம்பு மற்றும் சேவைகளின் பரந்த அளவு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வங்கியாக இன்று உஜ்ஜிவன் எத்தகைய நிலையில் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் காணவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
பல ஆண்டுகளாக தான் உருவாக்கியுள்ள நம்பகத்தன்மை,உண்மைத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன்,இந்தச்செய்தியை எடுத்துச் சொல்வதற்கு ஆர்.மாதவன், இயல்பாகவே பொருத்தமானவர்.