• Download mobile app
27 Jun 2026, SaturdayEdition - 3790
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பில் கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை திறப்பு !

March 14, 2026 தண்டோரா குழு

கோவையின் முக்கியப் பகுதியான ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே,மாணவர்களின் லட்சியக் கனவுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான பிரம்மாண்டமான (Dream Beyond) எனும் கருத்துரு சிலை திறக்கப்பட்டுள்ளது.

தி கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் அமைக்கப்பட்ட இந்தச் சிலையை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

இது குறித்து கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளித் தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் கூறுகையில்,

உலக உருண்டையின் மீது நின்றுகொண்டு, இரண்டு சிறுவர்கள் ஒரு கயிற்றின் மூலம் நிலவைத் தங்களை நோக்கி இழுப்பது போல் எல்லைகளை தாண்டி கனவு காணுங்கள் எனும் கருத்துருவோடு இந்தச் சிலை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் எல்லைகளைத் தாண்டிச் சாதிக்கும் மனப்பான்மையைக் குறிக்கிறது.

அறிவாற்றல், மன உறுதி மற்றும் நற்பண்புகள் இருந்தால் எட்ட முடியாத கனவு என்று எதுவுமே இல்லை என்பதை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்துவதே இச்சிலையின் நோக்கம்” எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க