• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் பிரபல இருதயவியல் நிபுணர் டாக்டர் தாமஸ் அலெக்ஸாண்டருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

August 7, 2026 தண்டோரா குழு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் பிரபல இருதயவியல் நிபுணர் டாக்டர் தாமஸ் அலெக்ஸாண்டருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சில் வழங்கியது.

முன்னணி இருதயவியல் நிபுணர்களில் ஒருவரான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் பிரபல இருதயவியல் நிபுணர் டாக்டர் தாமஸ் அலெக்ஸாண்டருக்கு,தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சிலின் (TIC 2026) 11-வது ஆண்டு விழாவில் மதிப்புமிக்க ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாரடைப்புக்கான அவசர சிகிச்சை முறையை (STEMI Project) மேம்படுத்த அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பையும், கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இருதய மருத்துவத் துறையில் அவர் செய்து வரும் ஈடு இணையற்ற சேவையையும் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில்,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் J.C.D. பிரபாகர் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் இந்த விருதை வழங்கிச் சிறப்பித்தனர்.

தனது நீண்டகால மருத்துவப் பயணத்தில், இருதய நோய்கள்,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு தொடர்பான பல்வேறு முக்கிய மருத்துவ ஆராய்ச்சிகளை இவர் முன்னெடுத்துள்ளார்.சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ இதழ்களில் 30-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்னணி இருதயவியல் அமைப்புகளில் முக்கிய உறுப்பினராக இருக்கும் இவர், இந்த விருதின் மூலம் இந்திய மருத்துவ உலகிற்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ளார்.

டாக்டர் தாமஸ் அலெக்ஸாண்டரின் இந்த சாதனையைப் பாராட்டி கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில்,

“இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் முறையை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வு எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. கேஎம்சிஹெச் குடும்பத்தின் சார்பில் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

“டாக்டர் அலெக்ஸாண்டரின் மருத்துவப் பயணம் இளம் தலைமுறை மருத்துவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. ஒரு சிறந்த இருதய நிபுணராக மட்டுமல்லாமல், மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மூலமாகவும் அவர் தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.அவர் எங்கள் மருத்துவமனையின் இருதயவியல் குழுவை வழிநடத்துவது எங்களுக்குக் கிடைத்த பெருமை” என்று கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குநர்,டாக்டர் அருண் என்.பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க