• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் அரசியலுக்கு வர அவரது தந்தை கோரிக்கை!

October 23, 2017 தண்டோரா குழு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் பா.ஜ.க கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வந்தனர். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்தார். அதில், நடிகர் விஜய் காந்தியவாதி, அவர் தலைவராக உருவாகி தன்னை நம்பியவர்களுக்கு மாற்றத்தை தரவேண்டும் என்றும் “மெர்சல்” திரைப்படம் விஜய்யின் கோபத்தின் வெளிப்பாடே என்றும் கூறினார்.

இதனால், தளபதி ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார், வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க