• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமையில் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது சிறப்பு கமிஷனர்!

October 23, 2018 தண்டோரா குழு

சபரிமையில் நடைபெற்று வரும் போரட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக சிறப்பு கமிஷ்னர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.இதையடுத்து கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தேவசாம் போர்டு சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அதில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தனர். மேலும் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மீது நவ.,13ம் தேதி அன்று விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சபரிமலைக்கான சிறப்பு கமிஷ்னர் மனோஜ் கேரளா உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அதில்,அடுத்த மாதம் திருவிழா நேரத்தில், சபரிமலையில் அதிகளவில் கூட்டம் கூடும். அப்போது,போராட்டம் தொடர்ந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போலீசார் பக்தர்கள் மற்றும் சிலருக்கு உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க