• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்

August 30, 2018 தண்டோரா குழு

இந்திய கம்யூ.கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைடுத்து அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இதனையடுத்து,தலைவர் பதவிக்கு ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதைப்போல் பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.

இதனைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவா்கள் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறாா்.இந்நிலையில் இன்று இந்திய கம்யூ.கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் படிக்க