• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடசென்னை படத்தின் இயக்குனர் வெற்றி மாறன் மீது வழக்கறிஞர் போலீசில் புகார்

October 22, 2018 தண்டோரா குழு

வடசென்னை திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 17ம் தேதி வெளியான படம் வடசென்னை.இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்காக இப்படத்திற்கு தணிக்கைகுழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருந்தது.

இந்நிலையில்,சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சார்லஸ் அலெக்சாண்டர் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அம்மனுவில்,வடசென்னை திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தாலும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.

சமூக அக்கறை இல்லாமல் பார்வையாளர்களின் மனதை புண்படுத்தி,காயப்படுத்தும் வகையில் இயக்குனர் வெற்றிமாறனால் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.ஆகையால் சமூகத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான்,சமூகத்தை சீரழிக்கும் விதமான திரைப்படங்கள் இனிமேல் வெளிவராது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,இப்புகாரைப் பெற்றுக் கொண்ட உளவுத்துறை துணை ஆணையர் விமலா,இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக சார்லஸ் அலெக்சாண்டர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க