October 17, 2018
தண்டோரா குழு
கோவை துடியலூர் அடுத்துள்ள கணுவாய் பகுதியில் செங்கல் சூளையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவை துடியலூர் அடுத்துள்ள கணுவாயில் இருந்து தாளியூர் செல்லும் வழியில் உள்ள தடுப்பணை உள்ளது. அதன் அருகே 40வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடப்பதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தடாகம் பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வரும் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றும்,கழுத்தில் அருவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும்,கொலை இரவு 12 மணியளவில் நடந்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
மேலும்,போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபணர்களை கொண்டு தடாயங்களை சேகரித்து கொலையாளியை தேடி வருகின்றனர்.செங்கல் சூளையில் வேலை செய்பவர் கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.