• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 28, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள,ரேபிடோ பைக் டேக்சி சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.கோவையை அடுத்த சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் மற்றும் நான்கு சக்கர வானங்களில் செல்லும் நபர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் கூறுகையில்,

“இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தொடர்பாக இதுவரை கோவை மாநகரில் 14,000 வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க