• Download mobile app
16 Jun 2026, TuesdayEdition - 3779
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவுக்கு ஆளுநர் பாராட்டு

October 22, 2016 தண்டோரா குழு

உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவுக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்தார்.

தமிழக முதலவர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவமனைக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்து, முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டுச் செல்கின்றனர். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அண்மையில் சந்தித்து சென்று முதல்வர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதையடுத்து, சனிக்கிழமை காலையில் இரண்டாவது முறையாக முதல்வரின் உடல் நலம் குறித்து அறிய, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்தார். அங்கு , ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம், அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், மருத்துவமனையில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய வித்யாசாகர் ராவ், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவுக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனைத் தலைவர், மருத்துவர்களிடம் தமிழக ஆளுநர் கேட்டறிந்ததாக ஆளுநர் மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் படிக்க