• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய தலைமுறை பூச்சிக்கொல்லி மருந்து ‘டிரான்ஸ்’ பாயர் நிறுவனம் அறிமுகம்

July 22, 2026 தண்டோரா குழு

பருத்தி செடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை திறம்பட கட்டுப்படுத்த உதவும் வகையில், புதிய தலைமுறை பூச்சிக்கொல்லியான ‘டிரான்ஸ்’ ஐ பாயர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த அறிமுகம் குறித்து, பாயர் நிறுவனத்தின் கிராப் சயின்ஸ் டிவிசன் இந்திய தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சீஃப் ஆபரேட்டிங் ஆஃபீஸர்) மோகன் பாபு கூறுகையில் அசுவினி (அஃபிட்ஸ்), தத்து பூச்சி (ஜஸிட்ஸ்) மற்றும் வெள்ளை ஈக்களின் இளம்பூச்சி பருவம் (வொயிட்ஃபிளை நிம்ஃப்ஸ்) உள்ளிட்ட பல்வேறு வகையான சாறு உறிஞ்சும் பூச்சிகளை பருத்தி விவசாயிகள் கட்டுப்படுத்த உதவும் வகையில் இந்த புதிய ‘டிரான்ஸ்’ பூச்சிக்கொல்லி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு வேறுபட்ட செயல்பாட்டு முறைகளை (காம்பிளிமெண்டரி மோட்ஸ் ஆஃப் ஆக்ஷன்) ஒரே தீர்வில் கொண்டுள்ள ‘டிரான்ஸ்’, சாறு உறிஞ்சும் பூச்சிகளைப் பரந்த அளவில் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, மேம்பட்ட மகசூல் மற்றும் விவசாயிகளுக்கு அதிக லாபத்தையும் பெற்றுத் தருகிறது.

மகாராஷ்டிரா,குஜராத்,மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு,கேரளா, ராஜஸ்தான்,கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்,தெலங்கானா,பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கிய பருத்தி விளையும் மாநிலங்களில், இந்தத் தயாரிப்பு 2026 ஜூலை முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.இந்தியாவில் பருத்தி சாகுபடியானது,ஒரே நேரத்தில் பல்வேறு வகையான சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல், பூச்சிகளிடம் அதிகரித்து வரும் பூச்சிமருந்து எதிர்ப்புத் திறன் மற்றும் குறைந்த செலவிலான பயனுள்ள தீர்வுகள் இல்லாமை போன்ற தொடர் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இத்தகைய சவால்கள் பெரும்பாலும் பயிரின் வீரியத்தைக் குறைப்பதோடு, குறைந்த மகசூலுக்கும், விவசாயிகளின் சாகுபடிச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கின்றன. மாறிவரும் இந்தத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘டிரான்ஸ்’ இரு வேறுபட்ட செயல்பாட்டு முறைகளைக் கொண்ட இரண்டு மேம்பட்ட வேதியியல் கூட்டுப் பொருட்களை ஒன்றிணைக்கிறது.நவீன விவசாயத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தயாரிப்பு, இரு வழி ஊடுருவும் தன்மை (டூ–வே சிஸ்டமிக் மூவ்மெண்ட்) மற்றும் இலைகளின் இருபுறமும் ஊடுருவிச் செயல்படும் திறன் (டிரான்ஸ்லாமினர் ஆக்ஷன்) கொண்டது.

இது தற்போதைய இலைகளையும், புதிதாக வளரும் தளிர்களையும் ஒருசேரப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது. மருந்து தெளித்த இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே மழை பெய்தாலும் நம்பகமான பலனைத் தரக்கூடியது. மேலும், இது ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டங்களுக்கு மிகவும் உகந்தது என்பதால், சுற்றுச்சூழல் சமநிலை கொண்ட நிலையான பயிர் பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பெரிதும் வழிவகுக்கிறது.

‘டிரான்ஸ்’ சிறந்த முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதுடன் மட்டுமின்றி, பூச்சிகள் பயிரை உண்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்துதல், இலைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் பயிர் ஆரோக்கியமாக வளரச் செய்தல் ஆகியவற்றின் மூலம் பயிரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு உதவுகிறது.பயிர்ச் சேதத்தை மிகக் குறைந்த அளவாகக் குறைப்பதன் மூலமும், அடிக்கடி மருந்து தெளிக்கும் தேவையைக் குறைப்பதன் மூலமும், இது மகசூல் திறனை அதிகரிக்க உதவுவதோடு விவசாயிகளின் முதலீட்டிற்கான லாபத்தையும் பெருமளவில் உயர்த்துகிறது. ‘டிரான்ஸ்’ பூச்சிக்கொல்லி மருந்தானது 100 மி.லி, 220 மி.லி மற்றும் 500 மி.லி அளவுள்ள பாட்டில்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

மேலும் படிக்க