September 5, 2026
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் சஹோதயா 11 பேர் கொண்ட கால்பந்து போட்டியில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 20 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடிய கேம்ஃபோர்டு பள்ளி மாணவிகள், அணியாக செயல்படும் திறன் மற்றும் விளையாட்டு ஒழுக்கத்தை வெளிப்படுத்தி முதலிடத்தை கைப்பற்றினர்.
அகரம் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்றது. கேம்ஃபோர்டு பள்ளி மாணவி துவரகா, சிறப்பாக செயல்பட்டு சிறந்த கோல் கீப்பர் விருதையும் பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகள், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வித் துறையினரை பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.
மேலும், எதிர்காலப் போட்டிகளிலும் அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெற வாழ்த்தினர்.