• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று விளையாட்டுகளில் கேம்ஃபோர்டு பள்ளி மாணவர்கள் அசத்தல்

October 17, 2026 தண்டோரா குழு

கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட ‘கேம்ஃபோர்டு ட்ரைஃபெக்டா 2026’ பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில், கேம்ஃபோர்டு பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடினர்.

‘கோல்டன் பூட்’ கால்பந்து, ‘சூப்பர் ஸ்பைக்கர்ஸ்’ கைப்பந்து, ‘ஷூட்டிங் ஸ்டார்’ கூடைப்பந்து ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.14 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் கால்பந்து பிரிவில் கேம்ஃபோர்டு அணி 3–0 என்ற கோல் கணக்கில் வென்றது. 17 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் விவேகம் பள்ளி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் கேம்ஃபோர்டு இரண்டாமிடம் பிடித்தது.

18 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் கைப்பந்து பிரிவிலும், 17 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் கூடைப்பந்து பிரிவிலும் கேம்ஃபோர்டு அணி முதலிடம் பெற்றது. கூடைப்பந்தில் ஜெயவோபாய் பள்ளியை 30–26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

நான்கு பிரிவுகளில் மூன்றில் முதலிடம் பிடித்த கேம்ஃபோர்டு மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

மேலும் படிக்க