• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாபெரும் பண்டிகைக் கால சலுகைகளுடன் க்ரோமாவின் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ விற்பனை தொடக்கம்

October 17, 2026 தண்டோரா குழு

டாடா குழுமத்தின் நேரடி விற்பனை மற்றும் இணையம் வாயிலான விற்பனை ஒருங்கிணைந்த பல்வகை சில்லறை வணிக எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனமான க்ரோமா,தனது புகழ்பெற்ற பண்டிகைக் காலப் வருடாந்திர விற்பனை கொண்டாட்டமான ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ விற்பனையை மீண்டும் தொடங்கியுள்ளது.

நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவுகளில், க்ரோமா பல்வேறு சிறப்புச் சலுகைகளை இந்த விற்பனை கொண்டாட்டத்தில் அறிவித்துள்ளது.வரவிருக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளையும் தனிநபர் சாதனங்களையும் நவீனமயமாக்குவதற்கு உகந்த வாய்ப்பாக இது அமைகிறது.

இதன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களுக்கு 35% நேரடித் தள்ளுபடி*, வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவன சலுகைகள் வாயிலாக ரூ.45,000 வரை கேஷ்பேக்*, மற்றும் ரூ.20,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற கவர்ச்சிகரமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற்றுப் பயன்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பண்டிகைக் கால விற்பனைத் திட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து க்ரோமா சில்லறை விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.

குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கான சிறப்புத் தள்ளுபடிகள், எளிய மாதாந்திரத் தவணை வசதிகள், பழைய சாதனங்களுக்கான எக்ஸ்சேஞ்ச் பலன்கள் மற்றும் கூடுதல் சேமிப்பு வாய்ப்புகள் என அனைத்தையும் ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்கள் தங்களது பண்டிகைக் கால ஷாப்பிங்கை முழுமையான பலன்களுடன் மேற்கொள்வதை இம்முயற்சி உறுதி செய்கிறது. இச்சிறப்புச் சலுகைகள் அனைத்தும் வரும் அக்டோபர் 31, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதுடன், நிறுவனத்தின் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாகும்.

பல்வேறு தயாரிப்புப் பிரிவுகள் மற்றும் விலைக் குறியீடுகளில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்கும் நோக்கோடு இச்சலுகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இச்சலுகைப் பலன்கள் தேர்ந்தெடுக்கப்படும் தயாரிப்பு, தேர்வு செய்யப்படும் கட்டண முறை, பழைய சாதனங்களின் எக்ஸ்சேஞ்ச் தகுதி மற்றும் குறிப்பிட்ட விற்பனை நிலையங்களின் இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

இச்சிறந்த சலுகைகளைப் பெற்றுப் பயனடைய, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள க்ரோமா சில்லறை விற்பனை நிலையங்கள்,க்ரோமா.காம் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டாடா குழுமத்தின் பிரத்தியேக டாடா நியூ செயலி ஆகியவற்றின் வாயிலாக ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ பிரச்சாரத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க